தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமாவோர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 41,325 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 4244 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் 3617 பேர்கள் ஆவர். தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 15,42.234 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 1,38,470 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இதுவரை தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் சுமார் 9 விழுக்காட்டு பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது. விரைவான பரிசோதனையால் பலர் உடனே கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்படுகிறார்கள். இதனால் உயிரிழப்பு விழுக்காடும் தமிழகத்தில் மிக குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் 52 தனியார் பரிசோதனை மையங்கள் மற்றும் 53 அரசு பரிசோதனை மையங்கள் உள்பட 105 பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 89,532 பேர் குணம் அடைந்துள்ளனர். குணம் அடைந்தவர்கள் விவரம் தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 1668 பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். இதனால் சென்னையில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 58615 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் இன்று ஒரே நாளில் 787 பேர்களும், சேலத்தில் 169 பேர்களும், செங்கல்பட்டில் 170 பேர்களும், திருவள்ளூரில் 140 பேர்களும், விருதுநகரில் 92 பேர்களும், தேனியில் 76 பேர்களும், திருவண்ணாமலையில் 77 பேர்களும், இராமநாதபுரத்தில் 46 பேர்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 38 பேர்களும், கள்ளக்குறிச்சியில் 41 பேர்களும், காஞ்சிபுரத்தில் 29 பேர்களும், இராணிப்பேட்டையில் 32 பேர்களும், தென்காசியில் 26 பேர்களும், நீலகிரியில் 24 பேர்களும், விழுப்புரத்தில் 33 பேர்களும், விருதுநகரில் 92 பேர்களும், தூத்துக்குடியில் 31 பேர்களும், திருநெல்வேலியில் 32 பேர்களும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



