Show all

மதுரை முழுவதும் சுவரொட்டிகள்! விஜய் சேதுபதி வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம். 800என்ற துரோக வரலாறுக்கு துணை போவது தவறு

முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடித்தால், மக்களைத் திரட்டி அவர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்பதாக மதுரை முழுவதும் சுவரொட்டிகள்

01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடித்தால், மக்களைத் திரட்டி அவர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று, மதுரை மாநகரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இலங்கை துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இலங்கை மற்றும் சிங்களவர்களுக்கு ஆதரவானர் எனவும், ஈழத்தமிழர் இனப்படுகொலையை நியாயப்படுத்தியவர் எனவும், அரசியல் கட்சியினரும், திரைப்பேரறிமுகங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மதுரையில் தமிழக இளைஞர் அரசியல் முற்போக்கு கட்சியை, சேர்ந்தவர்கள், 800 திரைப்படம் என்ற துரோக வரலாறுக்கு துணை போவது தவறு எனவும், எங்களுக்கு யாருடைய அறிக்கையும் தேவையில்லை எனவும், நடிகர் விஜய் சேதுபதி நடித்தால் மக்களை திரட்டி அவரது வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என சுவரொட்டிகளை மதுரை மாநகர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.