பயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது குறித்து மதுரை மாணவி அளித்த விளக்கத்தில்- இரண்டு காரணங்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது குறித்து மதுரை மாணவி அளித்த விளக்கத்தில்- இரண்டு அடிப்படையான காரணங்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மதுரை ஆனையூரை சேர்ந்த உய்ய சிறிநிலா என்ற மாணவி 666 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார். இவர் நீட் தேர்வுக்காக எந்த ஒரு பயிற்சி மையத்துக்கும் செல்லாமல் இந்த மதிப்பெண்களை பெற்றுள்ளார். முதற் காரணம்: அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் அவரது தந்தை பாண்டியராஜன், ஐயங்களுக்கு பதில் அளித்து உதவியிருக்கிறார். இரண்டாவது காரணம் நரிமேடு பகுதியில் உள்ள ஒற்றிய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். ஆக நீட் தேர்வுக்கான வினாக்கள் எந்தப் பாடத்திட்டத்தில் இருந்து தயாரிக்கப் படுகிறதோ அந்த பாடத்திட்டத்தில் அவர் கல்வி பெற்றிருக்கிறார். ஒற்றிய அரசு நேரடியாக நடத்தும் பள்ளிகளுக்கும், நடுவண் பாடத்திட்டத்தை பின்பற்றுகிற தனியார் பள்ளிகளுக்கும், நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கிற தனியார் நிறுவனங்களுக்கும் நேரடியாக உதவும் வகைக்கானதே ஒன்றிய அரசு அடாவடியாக முன்னெடுக்கும் நீட் தேர்வு என்பது தௌளத் தெளிவாகவே புரிகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



