800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளாதாக தெரிவித்துள்ளார். 04,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கை துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் வலுத்து வந்தன. இணைய ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என கருத்து கூறி வந்தனர். கீச்சுவிலும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தலைப்பாக்கப்பட்டது. இந்நிலையில் 800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளாதாக தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரனின் ஒப்புதலோடு விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகுவதால் அவருக்கான பொருளாதார ஆதயத்தில் இழப்பு ஏற்பட்டாலும் சட்டச் சிக்கல் இல்லாமல், 800 விபத்தில் இருந்து வெளிப்படுவார் விஜய்சேதுபதி.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.