Show all

கபினியில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடிநீர் தமிழகம் வருகிறது! குடகு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால்

31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஒரு கிழமை காலமாக குடகு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் கபினி அணை நிரம்பியது. கர்நாடகத்தின் அனைத்து அணைகளும் நிரம்பின.

மேலும் கபினி அணைக்கு வினாடிக்கு 30,000 கனடி நீர் வந்து கொண்டிருப்பதால் 15,000 கன அடிநீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளது கர்நாடக அரசு.

இரண்டு நாட்களுக்கு முன்பு குமாரசாமியின் பேச்சை நம்பி எடப்பாடி மேட்டூர் அணையை இந்த ஆண்டும் திறக்க வியலாத என்று கைவிரித்தார். இந்த ஆண்டு குடகு மாவட்ட கனமழை காவிரியில் நீர் உண்டு என்று பச்சைக் கொடி காட்டி விட்டது.

கபினி அணையிலிருந்து காவிரி நீர் தமிழகத்தை 2 நாட்களில் வந்தடையும். இதனால் உழவர்கள்;, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,818.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.