மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு 120 அடிகள். மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே புரட்டாசி மாதத்தில் அணையில் 40 அடிக்கே நீர் இருந்தது. 09,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு 120 அடிகள். மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே புரட்டாசி மாதத்தில் அணையில் 40 அடிக்கே நீர் இருந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இதே புரட்டாசியில் அணையில் நூறு அடிக்கு குறையாமல் நீர் இருப்புக்கு இயற்கை தமிழ்;நாட்டிற்கு ஒத்துழைத்து வருவதால், கருநாடகத்தோடு நமக்கு சச்சரவு இல்லா இயல்பு நிலை தொடர்ந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. உபரிநீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.62 அடியாக உயர்ந்தது. கடந்த நான்கு நாட்களில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.62 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 35,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி கழிமுக பாசனத்திற்கு நொடிக்கு 20,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நொடிக்கு 850 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 64.34 டி.எம்.சியாக உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



