Show all

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா

பல்லேகலேவில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக திரிமானே 80 ரன்னும், சண்டிமால் 36 ரன்னும் எடுத்தனர். இந்திய ஆணை தரப்பில் பும்ரா 5 விக்கெட்டும் ஹர்த்திக் பாண்ட்யா, யசுவேந்தர சஹால், அக்‌ஷர் பட்டேல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்தியா 45.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித்சர்மா 124 ரன்னும், டோனி 67 ரன்னும் எடுத்தனர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

44 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 210 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென இலங்கை ரசிகர்கள் ஆத்திரத்தில்  மைதானத்தில் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
 
இதனால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், களத்தில் இருந்த தோனி இதை எதையும் கண்டுக்கொள்ளாமல் மைதானத்தில் ஒரு குட்டி தூக்கம் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.