19 வத்திற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் உள்ள "பே ஓவல் " மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடியது. இந்த உலகக்கோப்பையில் விளையாடிய அணைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக அரை இறுதி சுற்றில் பாகிஸ்தானை 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 100 ரன்கள் வித்யாதிலும் , கால் இறுதி சுற்றில் பங்களாதேஷை 131 ரன்கள் வித்யாசத்திலும், இப்படி தான் விளையாடிய 5 ஆட்டங்களிலும் எதிர் அணியை வதம் செய்து அஞ்சா நெஞ்சனாய் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா. ஆஸ்திரேலியாவும் இந்தியாவை தவிர மற்ற எல்லா அணிகளையும் துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. இறுதிப்போட்டியில் டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணி திணறி வந்தது. அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். கேப்டன் ஜேசன் சங்காவும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.நாங்க தான் அவுட் ஆயிட்டோம் நீங்களாவது அவுட் ஆகாம ஆடுங்கனு கேப்டன் ஜேசன் சங்கா கூற ஜோனாதன் மெர்லோ 76 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு மரியாதையான 216 /10 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியாவிற்கு அளித்தனர். சுலபமான இலக்கு , முன்பே நாம் பயமுறுத்திய அணி என்பதால் நாம் இந்த ஆட்டத்தில் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இந்தியா களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்தியாவின் கேப்டன் பிரிதிவி சா மற்றும் மனோஜ் கல்டரா சிறப்பாக விளையாடி பிரிதிவி சா 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.மனோஜ் கல்டரா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 102 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றி பசி ஆற உதவி செய்தார். இதில் 8 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். ஹர்டிக் தேசாய் 61 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற செய்தார். எல்லா ஆட்டங்களிலும் பவுலர்கள் மனதில் மரண பீதியை ஏற்படுத்தும் சுபான் கில் , இந்த ஆட்டத்தில் இவுங்கள இதுக்கு மேல அடிச்சா கொலை கேஸ் ஆய்டும் னு நினச்சு 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 2 விக்கெட்டுகள் மட்டுமே கொடுத்து 38 .5 ஓவரிலேயே 220 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது இந்தியா! இந்த இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மனோஜ் கல்டராவிற்கு "பிளேயர் ஆப் தி மேட்ச்" பட்டமும் , இந்த உலகக்கோப்பை முழுவதும் சிறப்பாக விளையாடிய சுபான் கில்லுக்கு "பிளேயர் ஆப் தி சீரியஸ்" என்ற பட்டமும் கிடைத்துள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக விளங்கிய ராகுல் ட்ராவிட்க்கு 50 லட்சம் பணமும் , வீரர்கள் அனைவருக்கும் தலா 30 லட்சமும் BCCI வழங்கியது. இந்த உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்றதால் 4 முறை U19 உலகக்கோப்பை வென்ற முதல் அணி என்ற பட்டத்தை பெற்றுள்ளது.அதோடு ஒண்டே தர வரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியாவை மர்டர் பண்ண இந்தியாவிற்கு வாழ்த்துக்கள் ! உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து ஷேர் செய்து எங்களை உற்சாகப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



