விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 271 ரன்கள் எடுத்தது. தமிழக அணி சார்பில் தினேஷ் கார்த்திக் அதிகபட்சமாக 112 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்கால் அணி 45.5 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சட்டர்ஜி 58 ரன்களை எடுத்தார். தமிழக அணி சார்பில் அஸ்வின் கிறிஸ்து, முகமத், ஆர்.எஸ் ஷா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் பெங்கால் அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி வீழ்த்தியது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



