செயலலிதாவுக்கும், சோபன் பாபுவுக்கும் பிறந்த மகன்
தான்தான் என்று கூறி வரும் ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தற்போது அதற்கான உண்மை
ஆவணங்களை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார். செயலலிதாவின்
மகன் தான்தான் என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடுத்த ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி
இன்று அதற்கான உண்மை ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். செயலலிதா
கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி நீர் சத்துக் குறைபாடு, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில்
சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தொண்டர்கள் அப்பல்லோ வாசலில் காத்து
கிடந்தனர். 75 நாட்களாக
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி திடீரென மாரடைப்பு
ஏற்பட்டதால் அதிகபட்ச சிகிச்சைகள் அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். செயலலிதா
மரணம் தொடர்பாக தமிழகமே குழப்பத்தில் உளள நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி
என்பவர் தமிழக தலைமைச் செயலாளருக்கு ஒரு புகார் மனுவை அனுப்பினார். அதில்,
செயலலிதாவுக்கும், சோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் நான்தான். அவரது உண்மையான வாரிசு
நான்தான். அவரது சொத்துகள் எனக்கு மட்டுமே சொந்தம். ஜெயலலிதா இறப்பதற்கு 2 மாதங்களுக்கு
முன்னர், அதாவது கடந்த ஆண்டு 4 நாள்கள் அவருடன் போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்தேன். செயலலிதா
என்னை அவரது மகனாக இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று எண்ணியிருந்தார். இதை எப்படியோ
அறிந்து கொண்ட சசிகலா ஜெயலலிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது எனது அம்மா ஜெயலலிதாவை
சசிகலா மாடியில் இருந்து தள்ளிவிட்டார் என்று பரபரப்பு புகாரை தெரிவித்திருந்தார். தலைமைச்
செயலாளருக்கு அனுப்பிய புகாரைத் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி
வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்து நீதிஅரசர் உண்மையான ஆவணங்கள் தாக்கல்
செய்ய கிருஷ்ணமூர்த்திக்கு நேற்று உத்தரவிட்டார். அதன்படி
உண்மையான ஆவணங்களை சென்னை உயர்நீதி மன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்தார். பதிவுத்துறை
மூலம் காவல் ஆணையருக்கு அனுப்பி ஆவணங்கள் குறித்து விசாரிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



