இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா 451 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஸ்மித் 178, மேக்ஸ்வெல் 104 ரன் விளாசினர். ஜடேஜா 5 விக்கெட் கைப்பற்றினார். . அடுத்து களமிறங்கிய இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. ஜடேஜா (54 ரன், 55 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), இஷாந்த் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் கம்மின்ஸ் 4, ஓ கீப் 3, ஹேசல்வுட், லயன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதிகபட்சமாக புஜாரா 202 ரன்களும் சாஹா ௧௧௭ ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலியா 2 வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 204 எடுத்து போது 5 வது நாள் ஆட்டம் முடிந்தது. இதனால் இப்போட்டி டிராவில் முடிந்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சம நிலையில் உள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



