இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருவது ஒவர் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்க சென்றுள்ளது. தென்னாப்பிரிக்க மண்ணில், இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற குறையை இம்முறை கண்டிப்பாக போக்கும் என பெரும்பாலோனோர் எதிர்பார்க்கின்றனர். இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு நாட்களாக ரவீந்திர ஜடேஜா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் முழுவதும் குணமாக இன்னும் 2 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவரது உடல் நிலையை பிசிசிஐ மருத்துவ குழு கண்காணித்து வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் முன் சிறிய கணுக்கால் காயத்துடன் சென்ற ஷிகர் தவான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முழு உடல் தகுதியுடன் உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, தொடர்ந்து, 9 டெஸ்ட் போட்டித் தொடர்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



