19,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் 2,320 கோடி அபராதம் வசூல் அபராத வசூலில் மாநில இந்திய வங்கியைத் தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் வங்கி, கனரா வங்கி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இதில். மாநில இந்திய வங்கி மட்டும் 1,771 கோடி வசூலித்துள்ளது. இந்த வங்கிக்கு காலாண்டில் கிடைத்த நிகர வருவாய் 1,581.55 கோடியை விட, அபராத வகையில் அதிகமாக கிடைத்துள்ளது. நிகர லாபத்தையும் தாண்டி, கணிசமான அளவு அபராதம் வங்கிகளுக்கு வசூலாகியுள்ளது. குறைந்தபட்ச இருப்பு தொகை பேணாத வாடிக்கையாளர்களிடம் அபராதம் விதித்த வகையில் பொதுத்துறை வங்கிகளுக்கு 2,320 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் மாநில இந்திய வங்கிக்கு மட்டும் 1,771 கோடி கிடைத்துள்ளது. சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை பேணாத வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் அபராதம் வசூலிக்கின்றன. இந்த வகையில் பொதுத்துறை வங்கிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 2,320 கோடி வசூலித்துள்ளன. குறைந்தபட்ச இருப்பு இல்லாதவர்களிடம் அபராத தொகையாக பஞ்சாப் நேசனல் வங்கி 97.34 கோடியும், சென்ட்ரல் வங்கி 68.67 கோடி, கனரா வங்கி 62.16 கோடி ஈட்டியுள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,656
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



