சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வினை நிச்சயம் எடுப்போம் என்று கேப்டன் தோனி கூறியிருந்தார். ஆனால் ஏலத்தில் எடுக்கவில்லை, இறுதியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.7.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அஸ்வினும் சில நாட்களுக்கு முன்பு நான் மீண்டும் சென்னை அணியில் இடம் பிடித்தால் ஆட்டோவிலேயே மைதானத்திற்கு சென்று விடுவேன் என கூறியிருந்தார். ஆனால் அவரை சென்னை அணியில் எடுக்காதது மிகவும் வருத்தமான செய்தி. அஸ்வினும் சென்னை அணிக்கு ஆடிய இனிய நினைவுகளுடன் கிங்ஸ் லெவன் அணிக்கு விளையாடப்போவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியிருப்பதாவது: அயல் நாட்டு வீரர்களைப் பொறுத்தவரை நாங்கள் ஆல்ரவுண்டர்களையே பெரிதும் விரும்புகிறோம். அவர்கள் மீது முதலீடு செய்த பணத்திற்கான மதிப்பை அளிப்பார்கள் பிராவோ, வாட்சன் ஆகியோரை அதனால்தான் தேர்வு செய்தோம். இது ஸ்பின் பந்து வீச்சு ஆதிக்க அணி. இதுதான் இன்று உலக கிரிக்கெட்டில் டிரெண்ட். ஹர்பனன் சிங்கை மலிவாக ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளோம். அஸ்வின் பெரிய அளவில் அணிக்குப் பங்களிப்பு செய்துள்ளார். ஆனால் ஹர்பஜனை எடுத்ததில் மகிழ்ச்சியடைகிறோம். அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக வீசுகிறார். ஆனால் ஒருநாள் போட்டி அணியில் இல்லை, எங்கள் தெரிவு குறித்து மகிழ்ச்சியாகவே இருக்கிறோம், திறன் அளவு ஒன்றுதான். இவ்வாறு ஸ்டீபன் பிளெமிங் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



