Show all

2018 IPL ல் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் கிட்ட 12 .5 கோடி காசு இருக்குனு தெரியும் அவரு மேல கேசு இருக்குனு தெரியுமா?

ஆமா ! 2017 செப்டம்பர் 25 ஆம் தேதி பென் ஸ்டோக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் பிரிஸ்டல் நகரத்தில் உள்ள நைட் கிளப்புக்கு சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பென் ஸ்டோக்ஸ் 27 வயதுடைய ஒரு வாலிபரை பயங்கரமாக தாக்கியுள்ளார். இதனால் முகத்தில் காயம் ஏற்பட்டு பிரிஸ்டல் நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து அவர் மீது தெருச் சண்டையில் ஈடுபட்டதாக
வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். அன்று ஒரு நாள் இரவு பென் ஸ்டோக்ஸ் காவல் நிலையத்தில் தான் இருந்துள்ளார். அவர் அந்த நபரை தாக்கியதற்கான வீடியோ ஆதாரமாக உள்ளதா போலீசார் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து கிரிக்கெட் வாரியம் அவர்கள் இருவரையும் விளையாட தடை செய்ததால் நியூ ஸிலண்ட் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஏசஸ் டெஸ்ட் தொடரில் முதல் நான்கு ஆட்டங்களில் விளையாடிய இவர் ஐந்தாவது ஆட்டத்தை விளையாட முடியவில்லை.

இன்றளவும் இந்த வழக்கு முடியவில்லை . 2018 ல் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதை பொறுத்து தான் அவர் இந்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து நடக்கவிருக்கும் ஐபில் போட்டியில் விளையாட முடியுமா , முடியாத என்று தெரிய வரும் . இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் க்கு சாதகமாக தான் தீர்ப்பு வரும் எனவும் அவர் கண்டிப்பாக ஐபில் ல் விளையாடுவார் எனவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி , தீர்ப்பு சாதமாக இல்லயெனி ராஜஸ்தான் ராயல்ஸ் வேறொரு கிரிக்கெட் வீரரை தேர்ந்தெடுக்க முழு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.