நைஜீரியாவில் நடைபெற்ற லாகோஸ் ஓபன் சர்வதேச சேலஞ்ச் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ராகுல் மற்றும் மனு ஆத்ரி - சுமீத் ரெட்டி இணை சாம்பியன் பட்டம் வென்றனர் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முக்தோ அக்ரேய் இரண்டாம் இடம் பிடித்தார். ஆடவர்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சி ராகுல் யாதவ் சக வீரர் கரண் ராஜன் ராஜராஜனை எதிர்கொண்டார். இதில் ராகுல் 21-15, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் மனு ஆத்ரி - சுமீத் ரெட்டி ஜோடி நைஜீரியாவைச் சேர்ந்த காட்வின் ஒலோபுயா - அனொயுலுவாபோ ஜுவோன் ஒபேயொரி ஜோடியை 21-13, 21-15 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை முக்தோ அக்ரேய், இலங்கை வீராங்கனை திலினி பிரமோதிகா ஹெண்டாஹெவாவிடம் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



