இன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சரக்குமற்றும் சேவை வரி கருத்தரங்கில் நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கருத்தரங்கில் அருண் ஜெட்லி, நாட்டை நிர்வாகம் செய்வதற்கு வரி என்பது தலையாய தேவையாகும். நாட்டின் இறையாண்மை வலுவாக இருந்தால் மாநிலங்கள் தானாக வளர்ச்சி அடையும். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை ஒருமுகப்படுத்துவது என்பது சவாலான விசயம். வரி செலுத்துவதில் ஏகப்பட்ட நடைமுறைகள் இருப்பது ஊழலுக்கு வழி வகுக்கும். இதனாலேயே பெரும்பான்மையானோர் வரி செலுத்துவதற்குத் தயங்குகின்றனர். எனவே அதை எளிமையாக்கி உள்ளோம். ராணுவத்தினர் நம் எல்லைகளை பாதுகாக்கின்றனர். அவர்களுக்கு அதிக ஆயுதத் தேவைகள் இருக்கிறது. அதற்கு நிதி தேவை. ராணுவத்தினருக்கு செலவு செய்ய பணமில்லை என்று யாராலாவது சொல்ல முடியுமா? வரி செலுத்துவதன் மூலம் ராணுவத்துக்கான பங்களிப்பை மக்கள் அளிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். தமிழக மீனவர்களை எல்லையில் பாதுகாக்க வேண்டிய கடமை எல்லாம் இந்திய இறையாண்மையில் வராதா அருண்ஜெட்லி. ஜெட்லி வருகையையொட்டி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர்- பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள்ளேயே சிறைவைக்கப்பட்டனர். ஏனென்றால், சில வாரங்களுக்கு முன்னர் பா.ஜ.க-வின் இல.கணேசன் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். அப்போது அவருக்கு அம்பேத்கர்- பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் கருப்புக் கொடி காட்டி முழக்கங்கள் எழுப்பினர். அதைப் போன்ற சம்பவம் எதுவும் இன்று நடந்து விடக்கூடாது என்பதற்காக மாணவர்கள் சிறைவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



