06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹைதராபாத்தின் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரையும் விடுவித்து தீர்ப்பளித்த அறங்கூற்றுவர் ரவீந்தர்ரெட்டி பாஜகவில் இணையப் போகிறார். தற்போது அறங்கூற்றுவர் பதவியில் இருந்து விலகி விட்டார். இவர் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில், சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரையும் விடுதலை செய்து அதிரடியாக தீர்ப்பளித்தார். சாமியார் அசீமானந்த் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பதற்காக அவரை தீவிரவாதத்தில் ஈடுபடுவர் என்று கூற முடியாது என்றும் அறங்கூற்றுவர் தனது தீர்ப்பின்போது தெரிவித்திருந்தார். தீர்ப்பளித்த கையோடு தனது பதவியை விட்டு விலகிய இவர் உயர்அறங்கூற்றுமன்ற தலைமை அறங்டுகூற்றுவருக்கும் கடிதம் எழுதி விலகினார். இந்த நிலையில் தற்போது இவர் பாஜகவில் இணையவுள்ளார். பாஜக தலைவர் அமித்ஷாவை இவர் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தெலங்கானா பாஜக தலைவர் டாக்டர் கே.லட்சுமணும் உடன் இருந்தார். அந்த சமயத்தில்தான் தான் பாஜகவில் இணையவுள்ளதாக தெரிவித்தார் ரெட்டி. இது இந்தியா முழுவதும் பாஜக ஆதரவாளர்கள் நடுவே அதிர்ச்சி அலையை எழுப்பியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,918.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



