Show all

கொரோனா குணமளிப்புக்கு- தான் எடுத்துக் கொண்ட மருந்துக்களை வெளியிட்டார் விசால்!

விசால் குழுவினர் கொரோனாவிலிருந்து குணமடைய, மேற்கொண்ட கை மருத்துவ முறைக்கு, தாங்கள் எடுத்துக் கொண்ட மருந்துப் பொருட்களை வெளியிட்டுள்ளார் விசால்.

13,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் மருத்துவத்தில், கை மருத்துவம் என்பது ஒரு மருத்துவ முறையாகவே இருந்து வருகிறது. கிராமத்தில் பல நோய்களுக்கு மருத்துவ மனைக்குச் செல்லாமல், கை மருத்துவம் பார்த்துக் கொள்கிற முறை படிப்படியாக குறைந்து வருகிறது. அது மிகப்பெரிய வாய்ப்பை இழக்கிற ஒரு குறையாகவே கருதப்படுகிறது. 

ஆனால் ஆங்கில மருத்துவத்தில், மருத்துவத் துறை சான்றிதழ் பெறாதவர்கள் கை மருத்துவமாக அல்லோபதி மருந்துக்களை பயன்படுத்துவது குற்றமாகும். காரணம் என்னவென்றால் தமிழ்மருத்துவத்தில் கை மருத்துவத்திற்கு எடுத்துக் கொள்கிற மருந்துகள் உணவுப் பொருட்களே. அவை ஒவ்வொன்றும் உடலுக்கு ஒவ்வொரு வகை நற்பயன் விளைவிக்கக் கூடியவைகளே. ஆனால் அல்லோபதி மருந்துகள் ஒவ்வொன்றும்- ஒன்றோ பலவோ பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கிற கனிமப் பொருட்களாகும்.

குழந்தை கீழே விழுந்து சிராய்ப்பு காயம் ஏற்பட்டு விட்டதா? மஞ்சள் தூளை வைத்து அமுக்குவார்கள். வயிற்று வலியா? மாதவிலக்குக் கால வயிற்று வலிக்குக்கூட ஓமக்குடி நீர் வாங்கிக் குடிப்பார்கள். வயிற்றுக்போக்கா? மோர், இளநீர், வறத்தேநீர், சிறப்பாக பலனிளிக்கும். வயிற்றுக்கடுப்பா? இரசுத்தாளி வாழை, பொட்டுக் கடலை, பாகில் ஊறவைத்த உளுந்து வடை சாப்பிட்டால் தீரும். கிறுகிறுப்பா உடனடியாக இஞ்சிஅல்லது சுக்கு, கொத்துமல்லி காய், தேன் அல்லது சர்க்கரை சுடுநீர் உடனடியாக கேட்கும். இப்படி ஆயிரம் கைமருந்துகள் தமிழர்களிடம் புழக்கத்தில் உள்ளன. 

இந்த நிலையில் மிகக் கொடிய நோயாக உலகமே அஞ்சி ஓடோடிக் கொண்டிருக்கிற கொரோனாவிலிருந்து குணமடைய விசால் துணிச்சலாக கைமருந்து எடுத்துக் கொண்டது மரபு மருத்துவத்தின் சிறப்பைப் புலப்படுத்திய பாரட்டுக்குரியதா? இல்லை அவர் ஆங்கில மருந்தை செல்ப்மெடிக்கேசன் எடுத்துக் கொண்ட குற்றப்பாட்டுக்கு காரணமாகி விட்டாரா என்கிற கேள்வி, அச்சம், அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்த நிலையில் தான்- 
   
கொரோனாவில் இருந்து ஒரே கிழமையில் குணமடைந்த விசால், அதற்காக தான் பயன்படுத்திய மருந்துகளை வெளியிட வேண்டும் என்று பலரும் அழுத்தம் கொடுத்து வந்தார்கள். 

இந்த நிலையில் கொரோனாவிலிருந்து குணமடைய தான் எடுத்துக்கொண்ட மருந்துகளை வெளியிட்டுள்ளார் விசால்.

விசாலும், அவரது தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் விசாலின் உதவியாளர் ஹரி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே கிழமையில் குணமடைந்தனர். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமானதாக விசால் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் தாங்கள் பயன்படுத்திய மருந்தின் விவரங்களை வெளியிட்டுள்ள விசால், பலர் கேட்டு கொண்டதற்கு இணங்க அதனை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்றும், அனைத்து ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருந்தகங்களில் இது கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசால் குழுவினர் கொரோனாவிற்கு எடுத்துக் கொண்டாதாகக் குறிப்பிட்டுள்ள ஹோமியோபதி மருந்து- ஹோமியோபதி மருத்துவத்துறை தொடக்கத்திலேயே கொரோனாவிற்கு பரிந்துரைத்திருந்த ‘ஆர்சனிகம் ஆல்பம் 30சி’ தான். ஆயுர்வேத மருந்தாக ‘சிஎப்எஸ் க்யுஆர் குடிநீர்’ ‘பாட் குடிநீர்’ என்கிற இரண்டு ஆயுர்வேத மருந்துகளைத் தெரிவித்திருக்கிறார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.