Show all

மாருதி சுசூகி தனது கார்களுக்கு அறிவித்துள்ளது அதிரடி தள்ளுபடிகள்! இந்தியாவில் ஊர்திகள் உற்பத்தித் துறை சரிவை நேர்செய்ய

இந்தியாவில் ஊர்திகள் உற்பத்தித் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதை சரிசெய்ய, ஊர்தி உற்பத்தி நிறுவனங்களே சில முன்னெடுப்புகள் மூலம் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளில் நேர் செய்து விட முடியும் என்ற உறுதியில் வேலைகளைத் தொடங்கி விட்டன. அந்த வகையாக மாருதி நிறுவனம் அதிரடி தள்ளுபடிகளை மக்களுக்கு அறிவித்திருக்கிறது.

24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் ஊர்திகள் உற்பத்தித் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதை சரிசெய்ய, தாம் முன்னெடுத்த தேவையற்ற முயற்சிகளைக் கைவிட்டு, முறையான நடவடிக்கைகளை பாஜக ஆளுமையில் உள்ள இந்திய அரசு முயலுமேயானால் எளிதாக மூன்றே மாதங்களில், ஊர்திகள் உற்பத்தித் துறை சந்தித்து வரும் பெரும் சரிவைச் சரிசெய்து விடமுடியும் என்பதாக துறை சார்ந்த வல்லுநர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றார்கள்.

ஆனால் ஊர்திகள் உற்பத்தி மற்றும் பொருளாதாரத் துறை வல்லுநர்கள் ஆலோசனைகளைத் செவிமடுக்காமல், பாஜக ஆளுமையில் உள்ள இந்திய அரசு, குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக என்பதாகவே தான்தோன்றித் தனமாக எதிரான நடவடிக்கைகளையே முன்னெடுக்கின்றனர். 
  
ஆனாலும் ஊர்தி உற்பத்தி நிறுவனங்களே தமது சொந்த முயற்சியில் இந்த வீழ்ச்சியில் இருந்து நேர்ப்படுத்திக் கொள்ள முடியும் என்பதும் துறைசார்ந்த வல்லுனர்களின் கருத்தாக இருப்பதால், ஊர்தி உற்பத்தி நிறுவனங்கள், (எந்தத் துறை விற்பன்னர்களும் இல்லாத பாஜக கட்சி ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் இந்திய அரசை) வெறுமனே நம்பிக் கொண்டிருக்காமல், தங்கள் சொந்த முயற்சிகளைத் தனித்தனியாக ஒவ்வொரு நிறுவனங்களும் தொடங்கி விட்டன.

அந்த வகையாக, இந்தியாவின் மிகப்பெரும் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி தனது கார்களுக்கு அதிரடியான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அரினா விநியோகத்தின் கீழ் விற்பனையாகும் மாருதி சுசூகியின் கார்களுக்கு இந்தத் தள்ளுபடி சலுகை பொருந்தும்.

மாருதி சுசூகியின் எஸ்யூவி ரகங்களில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள விதாரா ப்ரெஸ்ஸா காருக்கு 1 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி உள்ளது. கூடுதலாக ஐந்து ஆண்டுக்கான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் வழங்கப்படுகிறது. உத்தரவாதம் வேண்டாம் என நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதற்கேற்ற பணம்திருப்பும் சலுகையும் வழங்கப்படுகிறது.

இதேபோல், செடான் ரக கார்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடியும் டீசல் ரக கார் என்றால் ஐந்து ஆண்டுகால உத்தரவாதமும் கொடுக்கப்படுகிறது. டிசைர் காருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி உள்ளது. சிப்ட் பெட்ரோல் ரக காருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் எக்ஸ்சேஞ்ச் கார்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் சலுகை உள்ளது.

ஆல்டோவுக்கு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் செலேரியோவுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் ஈகோ காருக்கு 45 ஆயிரம் ரூபாய் முதல் 55 ஆயிரம் ரூபாய் வரையிலும் ஆம்னி வகை காருக்கு 35ஆயிரம் ரூபாய் வரையிலும் வேகன் ஆர் காருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலைச்சலுகை உள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,271.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.