கடலுக்கு அடியில், 2200 கிமீ ஒளிஇழை வடம் மூலமாக, எட்டு தீவுகளுடன் சென்னையை இணைக்க அசரவைக்கும் திட்டம். இது இந்திய ஆதிக்கத்தில் உள்ள தீவுகளுக்கு அதிவேக இணையத்தரவு வழங்குவதற்கான இந்தத் திட்டத்திற்கு நடுவண் அரசு அனுமதி. 22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கடலுக்கு அடியில், 2200 கிமீ ஒளிஇழை வடம் மூலமாக, எட்டு தீவுகளுடன் சென்னையை இணைக்க அசரவைக்கும் திட்டம். இது இந்திய ஆதிக்கத்தில் உள்ள தீவுகளுக்கு அதிவேக இணையத்தரவு வழங்குவதற்கான திட்டம் ஆகும். சென்னையை கடலுக்கு அடியில் 8 தீவுகள் உடன் இணைக்கும் இந்தத் திட்டத்திற்கு நடுவண் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் கடலுக்கு அடியே ஒளிஇழை வடம் (பைபர் ஆப்டிக் கேபிள்) அமைப்பது இந்தியாவின் பல ஆண்டுகால திட்டமாகும். இந்த நிலையில் சென்னையில் இப்படி அமைய உள்ள ஒளிஇழை வடம் அமைக்கும் திட்டத்திற்கு தேசிய வனவிலங்கு மையம் அனுமதி அளித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்திய கடல் பகுதியில் இந்த ஒளிஇழை வடம் செல்ல இருப்பதால், தேசிய வனவிலங்கு மையத்தின் அனுமதி இதற்கு கட்டாயம் ஆகும். அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அந்தமானில் உள்ள 8 தீவுகளுக்கு சென்னையில் இருந்து ஒளிஇழை வடம் கடலுக்கு கீழே கொண்டு செல்வதுதான் இந்த திட்டம் ஆகும். அந்தமான் தீவுகளுக்கு வேகமான இணைய வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அந்தமானில் சீனா ஆதிக்கம் செய்ய கூடாது, அங்கு இணைய வசதியை ஏற்படுத்தி காவல்நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா இந்த திட்டத்தை தற்போது கையில் எடுத்துள்ளது. அந்தமான் தீவுகளுக்கு 100 ஜிபி வேகத்தில் இதன் மூலம் இணையம் வழங்கப்படும். அதன்படி சென்னையை போர்ட் பிளேயர், லிட்டில் அந்தமான், கார் நிகோபார், காமோர்தா, கிரேட் நிக்கோபார், ஹாவ்லாக், லாங் மற்றும் ரங்கட் தீவுகள் ஆகிய தீவுகளை இணைக்க உள்ளனர். இந்த திட்டடத்திற்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இதனால் விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று கூறுகிறீர்கள். சென்னை இதனால் அதிக கவனம் பெறுகிறது. இந்த திட்டத்தின் படி 8 தீவுகளுக்கு சென்னையில் இருந்து மொத்தம் 2200 கிமீ தூரத்திற்கு ஒளிஇழை வடம் அமைக்கப்படும். மிகவும் பாதுகாப்பான இந்த திட்டம், என்இஏ கார்ப்பரேஷன் எனப்படும் ஜப்பான் நிறுவனம் நடுவண் அரசுடன் இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனம் இன்னும் 3 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை செயலுக்கு கொண்டு வரும். இதனால் அந்த 8 தீவுகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில், அதி வேக இணைய வசதி கிடைக்கும் என்கிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



