காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில், காவல்துறையோடு சம்பளம் இல்லாமல் ஈடுபட்டுவரும் 4000 பேர்கள் காவல்துறையினரின் அடாவடிகளுக்கு ஒத்துழைக்கின்றனரா? அல்லது இந்த காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில், காவல்துறையோடு சம்பளம் இல்லாமல் ஈடுபட்டுவரும் 4000 பேர்களில் பெரும்பாலோர் தங்கள் இயக்க நடவடிக்கைக்காக காவல்துறையில் ஊடுருவி, காவல்துறையினரை மூளைச்சலவை செய்து குறிப்பிட்ட நபர்கள் மீது அடாவடியை ஏவிவிடுகின்றனரா என்று ஆய்வு தமிழகத்தில் தொடங்கி பரவலான பேசுபொருளாகியிருக்கிறது. 22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில், காவல்துறையோடு சம்பளம் இல்லாமல் ஈடுபட்டுவரும் 4000 பேர்கள் காவல்துறையினரின் அடாவடிகளுக்கு ஒத்துழைக்கின்றனரா? அல்லது இந்த காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில், காவல்துறையோடு சம்பளம் இல்லாமல் ஈடுபட்டுவரும் 4000 பேர்களில் பெரும்பாலோர் தங்கள் இயக்க நடவடிக்கைக்காக ஊடுருவி, காவல்துறையினரை மூளைச்சலவை செய்து குறிப்பிட்ட நபர்கள் மீது அடாவடியை ஏவிவிடுகின்றனரா என்று ஆய்வு தமிழகத்தில் தொடங்கி பரவலான பேசுபொருளாகியிருக்கிறது. சாத்தான் குளம் அப்பா மகன் படுகொலை இந்தக் காவல்துறை நண்பர்களின் மூளைச்சலவை பின்னணியில் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை என்ன காரணம் பற்றியோ தோண்டி துருவ விருப்பம் இல்லாத காவல்துறை தமிழகம் முழுவதும் இந்த காவல்துறை நண்பர்களை காவல் நிலையங்கள் அனுமதிப்பதற்கு தடைவிதித்துள்ளது. தமிழகத்தில் காவலர்களுக்கு உதவியாக இருக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தற்போது அவர்களுக்கு வினையாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல்துறை நண்பர்கள் அமைப்பிற்கும் தொடர்பிருப்பதாக விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வில் 6 பேரிடம் தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து காவல்துறையினருடன் இணைந்து கொண்டு தங்கள் விருப்பு வெறுப்பை காட்டும் இந்த அமைப்பு கலைக்கப்பட வேண்டும் என கண்டன குரல்கள் வலுக்கின்றன. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 27 ஆண்டுகள் ஆகின்றன. இந்த அமைப்பு முதன்முதலாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஒரு நெருக்கத்தை கொண்டுவருவதே இதன் நோக்கமாக சொல்லப்பட்டு வளர்ச்சி கண்டது. தற்போது 4000 பேர் இந்த அமைப்பில் உள்ளனர். இவர்கள் இந்தப் பணிக்காக விண்ணப்பித்து தேர்வாகிறார்கள். இதற்காக இவர்களுக்கு ஊதியம் ஏதும் வழங்கப்படுவதில்லை. காவல்துறையினருடன் அன்றாடத் தொடர்பில் இருப்பது என்பதான ஒரு ஈர்ப்பு காரணமாகவே பெரும்பாலான இளைஞர்கள் இதில் சேருகிறார்கள். குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காகவும, காவல்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை இழப்பை திரும்ப கொண்டு வருவதற்காகவும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதாக சொல்கிறார்கள். காவல்துறையின் ஆற்றலை வலுப்படுத்துவதற்கும் அவர்களின் தவறான பிம்பத்தை போக்குவதற்கும் இந்த அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு சாத்தான் குளம் தந்தை, மகன் உட்பட எத்தனையோ அப்பாவிகள் இறப்பதற்கும், காயமடைந்ததற்கும் காரணமாக இருந்ததாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதனால் அந்த அமைப்பை முற்ற முழுக்கவும் கலைக்க வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்துள்ளன. காவல்துறை நண்பர்களின் திருவிiளாடல்கள் முழுவதுமாக வெளியாவதற்குள் அதை கலைத்துவிட காவல்துறையினர் விரும்புவதாக தெரியவருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



