Show all

அன்றாடம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை விளம்பரப் படுத்தலாமே! அவரோடு தொடர்பில் இருந்தவர்களைத் தங்களை வெளிப்படுத்தக் கோரலாமே

09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கனிகா கபூருக்கு கொரோனா தாக்குதல் இருக்கிறது என்று விளம்பரம் ஆனது போல, கெரோன தொற்று உள்ளவர்கள் பட்டியலை- அன்றாடம், அரசு அடையாளத்துடன் வெளியிட்டு அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் எல்லாம் தயவுகூர்ந்து இந்த எண்ணோடு தொடர்பு கொண்டு தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள் என்று அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் செய்தால் எளிதாக கொரோனா பரப்புதலுக்கு வாய்ப்பானவர்களை அடையாளம் கண்டு கொரோன பரவலை தடுக்க நல்ல வழிமுறையாக அமையுமே என்று சிலர் இணையத்தில் ஆலோசனை தெரிவித்து வருகின்றார்கள். சட்ட சிக்கல் இல்லாத பட்சத்தில் அரசு இதை முன்னெடுக்கலாமே. அனைத்து ஊடகங்களும் இதற்கு ஆர்வமுடன் உறுதியாக ஒத்துழைக்குமே.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.