நெப்ட், ஆர்டிஜிஎஸ் போன்ற இயங்கலை பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி. 24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் நிதிநிலைக் கூட்டம் மூன்று நாட்களான இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி வகிதம் 6 விழுக்காட்டிலிருந்து 5.75 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ ரேட் எனப்படும் வங்கிகளுக்கான வட்டி விகிதமும் 6 விழுக்காட்டிலிருந்து 5.50 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி வகிதம் குறைக்கப்பட்டதன் மூலம் வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் மீதான வட்டி வகிதம் குறைய வாய்ப்பாக அமையும். நிதிக் கொள்கைளையும் மக்களுக்கு பயன் உள்ளதாக மாற்ற இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி இயங்கலை பணபரிவர்த்தனை தொடர்பான நெப்ட,; ஆர்டிஜிஎஸ் போன்றவைகளுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம் என வங்கிகளுக்கு இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அறிவுறுத்தி உள்ளது. மேலும் பிற பணம் வழங்கும் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் தொடர்பாக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்குள் இதன் முதல் கூட்டம் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,176.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



