துணை முதல் அமைச்சர் பொறுப்பில், முதன்மைச் சாதிகளுக்கான இடஒதுக்கீடு காண்கிறார், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி. இது சமூக வளர்ச்சிக்கு உகந்த முன்னெடுப்பா? என்பதை காலமே தீர்மானிக்கும். எப்படி இருப்பினும், ஒரு புதிய தொடக்கம் வளர்ச்சிக்கான விதைதான். 24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஐந்து துணை முதல்வர்களை கொண்ட அமைச்சரவையை ஆந்திர மாநிலம் காணவிருக்கிறது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் இடம் பெற உள்ளனர். அவர்கள் நாளை பதவி ஏற்கிறார்கள். அண்மையில் நடைபெற்ற ஆந்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி 151 இடங்களில் வெற்றி பெற்று முதல் அமைச்சராகப் பதவியேற்றார். இந்நிலையில், ஆந்திர அமைச்சரவையில்- சமுதாயத்திற்கு ஒருவர் என 5 பேரை துணை முதல் அமைச்சர்களாக ஆந்திரப்பிரதேசம் மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நியமிக்க உள்ளார். இவர்கள் 5 பேரும் நாளை பதவி ஏற்கிறார்கள். துணை முதல்வர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் 24 பேர்கள் நாளை காலை 9.15 மணிக்கு பதவி ஏற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,176.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



