Show all

இனி நேரடி ஒளிபரப்பு உண்டாம்! அரசியல் சாசன வழக்குகளில் மட்டும்; மூன்று மாதம் ஒத்திகையாம்; தோதுபட்டால் தொடரும்

07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் விசாரிக்கும் அரசியல் சாசன வழக்குகளை முதல் கட்டமாக நேரலை செய்ய உச்சஅறங்கூற்றுமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை நாட்டின் குடிமக்களுக்கு இருப்பதால், அரசியல் சாசனம் மற்றும், தேசிய அளவில் முதன்மைத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும்போது, அதை உச்சஅறங்கூற்றுமன்றம் நேரடி ஒளிபரப்பாக காண்பிக்க வேண்டும், என்று, மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் என்பவர் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உச்சஅறங்கூற்றுமன்ற விசாரணையை நேரலையாக காண்பிப்பது காலத்தின் கட்டாயம் என்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கையை ஏற்றது உச்சஅறங்கூற்றுமன்றம்.

இதையடுத்து நடுவண் அரசு இன்று பதிகை செய்த பதிலில், அரசியல்சாசன விவகாரங்களை தலைமை அறங்கூற்றுவர் அமர்வு விசாரிக்கும்போது மட்டும் அதை நேரலையாக ஒளிபரப்பலாம். வெள்ளோட்ட அடிப்படையில் அதிகபட்சம் 3 மாதங்கள் பார்த்து அதன்பிறகு ஆய்வு செய்து, அடுத்தகட்ட, நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சரி நேரலையாக பார்க்கிறோம் ; குற்றங்குறைகள் தென்பட்டால் கருத்து சொல்ல முடியுமா? அறங்கூற்றுமன்ற அவமதிப்பு ஆகி விடாதா? அதற்கு ஏதாவது வழியிருந்தா சொல்லுங்கண்ணே சொல்லுங்க!

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,857. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.