05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகத்தில் ராகுல் தலைமையில் காங்கிரஸ், கண்ணியமாக மாநில கட்சியை முன்னிறுத்தி பாஜகவை எதிர்கொண்டது காங்கிரஸ் வரலாற்றில் புதுசுதான். அதற்கான வெற்றியை சிரத்தையுடன் அறங்கூற்றுமன்றம் பெற்றுத் தந்திருக்கிறது. கடந்த காலங்களில் திமுகவை ரொம்பவும் கேவலமாக வழிநடத்தி கூட்டணி வைத்துக் கொண்டிருந்ததுதான் காங்கிரஸ். தமிழீழ மக்களுக்கு, திமுக ஆறுதல் சொல்ல முடியாமல் வாயைக் கட்டி வைத்து மிரட்டி கூட்டணி வைத்திருந்ததுதான் காங்கிரஸ். மாநிலக் கட்சிகளை கேவலமாக நடத்தியிருக்காமல் இருந்திருந்தால் காங்கிரஸ் இந்த அளவிற்கு பாஜகவிடம் இந்தியாவில் இத்தனை மாநிலங்ளை விட்டுக் கொடுத்திருக்காது. இந்தியா முழுவதும மாநிலக் கட்சிகளின் துணையுடன் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று கர்நாடகா தேர்தல் மூலம் காங்கிரஸ் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் மாநிலக் கட்சிகளை கண்ணியமாக நடத்த வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டால் பாஜக இல்லாத இந்தியாவை காங்கிரஸ் உருவாக்க முடியும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,792.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



