வைகோ அவர்கள் தொடுத்த வழக்கில், நடுவண் அரசு திட்டமிட்ட நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு தடை வழங்கி, அறங்கூற்று மன்றம் நிபந்தனைகளையும் விதித்தது. அறங்கூற்று மன்றம் விதித்த நிபந்தனைகளை நிறைவு செய்யமலே, நடுவண் அணுசக்தித் துறை தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக எழுத்துப்பூர்வ அறிக்கை மாநிலங்கள் அவையில் கொடுக்கப்பட்டுள்ளது. 26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகம், தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரத்தில் உள்ள அம்பரப்பர் மலையை குடைந்து, வான் வெளியில் இருந்து வரும் கண்களுக்குப் புலப்படாத நியூட்ரினோ கற்றைகளை ஆய்வு செய்ய, நடுவண் அரசு திட்டமிட்டது. இதற்கு அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், தமிழக நலம் விரும்பும் அறிஞர் பெருமக்கள், வேளாண் பெருமக்கள, பாதிக்கப் படவிருக்கிற அந்தப் பகுதி மக்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆய்வு மையம் அமைக்க தடையாணை பெற்றார். தமிழக அரசின் மாசுக் கட்டுப்பட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது எனவும் திர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான பணிகள் நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தற்போது நடுவண் அரசு, நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த வேகம் காட்டுகிறது. தேனி மாவட்டத்தில் அமைக்கப்படபோகும் “இந்தியாவைத்; தளமாகக் கொண்ட நியுட்ரினோ ஆய்வகம்” ஒரு மலையினுள் ஆய்வுக்கூடத்தையும் மலையின் வெளியே அலுவலகம் மற்றும் குடியிருப்புகளைக் கொண்டிருக்கும். மலை உச்சியிலிருந்து 1300 மீட்டருக்கு கீழ் அடுத்தடுத்து இரண்டு குகைகள் இருக்கும். ஒரு குகையில் உணர்க்கருவியும் மற்றொன்றில் கட்டுப்பாட்டு அறையும் இருக்கும். பிரச்சனை வந்தால் பாதுகாப்பு வகைக்காக என்று இக்குகைகள் பல சுரங்கப்பாதைகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். தலைமை குகையானது 130 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும், 30 மீட்டர் உயரமும் கொண்டிருக்கும். சார்னோகைட் பாறைகளால் ஆன மலையினுள்ளே இவை அமைக்கப்படுவதால், இவ்விடம் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லப் படுகிறது. கடல் மட்டதிலிருந்து 400 மீட்டர் உயரத்தில் இந்த “இந்தியாவைத் தளமாகக் கொண்ட நியுட்ரினோ ஆய்வகத்தின்” நுழைவாயில் அமைந்திருக்கும். இந்த நுழைவாயில், 2 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதைக்கு அழைத்துச்செல்லும். இந்த சுரங்கப்பாதையானது 7 மீட்டர் அகலமும் 7 மீட்டர் உயரமும் கொண்டுள்ளதால் இருவழி வாகன போக்குவரத்து சாத்தியப்படும். நடுவண் அரசின் இந்தத் திட்டம் நியூட்ரினோ குறித்த ஆய்வுக்கான ஒரு திட்டம், அவ்வளவுதான். அந்த திட்டத்திற்கான ஆய்வகம் கட்டி முடிப்பதற்கே பல ஆண்டுகள் ஆகும். அந்த திட்டம் செயலுக்கு வந்து நியூட்ரினோவை எப்படி எதற்கு பயன்படுத்துவது என்பதையெல்லாம் முழுமையாக தெளிவாக இலட்டு மாதிரி பயன் படுத்துவதற்கு மேலும் பற்பல ஆண்டுகள் ஆகும். பொதுவாக நடுவண் அரசு திட்டம் என்றாலே வடஇந்தியர்கள் தாம் பணியில் அமர்த்தப் படுவார்கள். அந்தப் பற்பல ஆண்டுகள், தமிழகத்தின் ஒரு பெரும்பகுதி வட இந்திய மயமாக்கப்படும். பத்து இருபது ஆழ்துளை கிணறுகளை விட ஒரு ஆழ்துளை கிணற்றை பத்து இருபது மீட்டர் ஆழம் கூடுதலாகக் தோண்டினாலே அந்த பத்து இருபது கிணறுகளும் தண்ணீர் இல்லாமல் வறண்டு வீணாகி விடும் என்பது எளிய பாமரனுக்கும் தெரிந்த செய்தி. அப்படி இருக்கையில்- தமிழகத்தில், மதுரையில், தேனியில் ஒரு மலையைக் குடைந்து அமைக்க அனுமதி அளிக்கப் பட்டிருக்கிற “இந்தியாவைத் தளமாகக் கொண்ட நியுட்ரினோ ஆய்வகம்” கட்டுமானம் குறித்த பட்டியலை திரும்ப ஒரு முறை புரட்டிப் பாருங்கள். தமிழகத்தின் எவ்வளவு பெரிய பகுதி எப்படியெல்லாம் பாதிக்கப் படும் கணக்குப் போட்டால் நம்முடைய தலையே சுழலத் தொடங்கி விடும். இதன் பொருட்டே தமிழக நலம் விரும்பும் அறிஞர் பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், வேளாண் பெருமக்கள், பாஜக தவிர்த்த அனைத்து தமிழக கட்சிகள் என்ற பல்வேறு தரப்பினரும் இதற்கு எதர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கண்ணுக்குத் தெரியாத ஒரு பொருளைப் பற்றிய ஒரு ஆய்வகம் தொடங்கப் படுகிறது. அது தரும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளவே பல ஆண்டுகாலம் பாஜகவை நாம் தாங்கிக் கொண்டிருந்தாக வேண்டும் என்பது முதல் தீமை. மேலும் தீமைகள் என்று பார்த்தால் நாள் கணக்காக மாதக் கணக்காக பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,210.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.