காவிரி நீர் வழக்கு இறுதி வாதம் உச்சஅறங்கூற்று மன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே கர்நாடகம் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்த நிலையில் தமிழக அரசு தனது இறுதி வாதத்தை தொடங்கியது. அப்போது வழக்கறிஞர்கள் காவிரி நீர்பிரச்சனையில் நடுவண் அரசு கர்நாடகத்துக்கு சாதகமாக நடந்து கொள்கிறது. காவிரி நீர் இல்லையெனில் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்க, அறங்கூற்றுமன்றமும் நடுவண் அரசும் மறுத்து வருகிறது. காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் இருந்து நடுவண் அரசு திடீர் என்று பின் வாங்கி விட்டது என்றனர். உடனே குறுக்கிட்ட அறங்கூற்றுவர்கள், நடுவண் அரசு வழக்கறிஞரைப் பார்த்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இருந்து ஏன் பின் வாங்கினீர்கள் என்று கேள்வி விடுத்தனர். இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் தமிழக அரசு தனது இறுதிவாதத்தை 8 நாட்களுக்கு எடுத்து வைக்கிறது. அதன் பிறகு நடுவண் அரசு இறுதி வாதத்தை வைத்த பின்பு அறங்கூற்றுவர்கள் தீர்ப்பு வழங்குகிறார்கள். தொடக்கம் எல்லாம் நான்றாகத்தான் இருக்குது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



