Show all

பணம் வாங்கிக் கொண்டு அய்யாக்கண்ணு டெல்லியில் போராடுகிறாராம்

வேளாண் கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான குழுவினர், டெல்லியில் கடந்த சூலை 16 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர், அய்யாக்கண்ணு செல்;பேசி எண்ணுக்கு அனுப்பிய குறுந்தகவலில்

பெரியவரே தவறு செய்கிறீர். உங்கள் குடும்பத்தார் முன்பு கோவணத்துடன் உட்கார்ந்து பார்க்கவும். விவசாயிகளின் கடன் நாங்கள் கொடுத்த வரிப்பணம். கர்நாடகா சென்று லாபகரமாக விவசாயம் செய்ய கற்றுக் கொள்ளுங்கள்என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிலர் ஆபாசமான சொற்களைப் பயன்படுத்தி அனுப்பிய குறுந்தகவல்களையும் அய்யாக்கண்ணு காட்டினார்.

டெல்லியில் இரண்டாவது முறையாக போராட 102 பேர் வந்தோம். அதில் சுமார் 70 பேர் உடல் நலம் குன்றி போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காத நிலையால் அவரவர் ஊர்களுக்குத் திரும்பி விட்டனர். மீதமுள்ள 32 பேரும் ஜந்தர் மந்தரில் இரவு பகலாக போராடி வருகிறோம் என்கிறார் அய்யாக்கண்ணு.

தன்னைப் பற்றி அவதூறு தகவல்களை வெளியிட்டவர் ஹெச்.ராஜா. அதன் பிறகுதான் சமூக ஊடகங்களில் என்னை விமர்சித்து பலவித தகவல்கள் வரத் தொடங்கின என்கிறார் அய்யாக்கண்ணு.

ஜந்தர் மந்தரில் உழவர்களுக்கு சிலர் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தனர். உள்ளூர் பாஜகவினரின் அழுத்தங்களால் அவர்கள் வெளிப்படையாக ஆதரவு வழங்க மறுக்கின்றனர் என்றும் அய்யாக்கண்ணு கூறினார்.

இந்த நிலையில் யாருடைய தூண்டுதலிலோ பணத்தை வாங்கிக் கொண்டு அய்யாக்கண்ணு செயல்படுவதாக ஹெச்.ராஜா வழக்கம் போல தன் எசமான விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.