தேர்தல் பரப்புரையில் விதிமீறல் தொடர்பாக இதுவரை பதிவுசெய்யப்பட்ட 426 வழக்குகளில் மோடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு மட்டும் தேர்தல் ஆணைய இணையத்தில் இல்லை என தகவல் வெளியாகி பாமர மக்களை தேநீர் கடைகளில் புலம்ப வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். ஆம்! மக்களின் நம்பிக்கைக்கு உறுதி அளிப்பதில் முதன்மை பேண வேண்டிய தேர்தல் ஆணையம். உச்ச அறங்கூற்று மன்றம் தேர்தல் ஆணையத்திற்கு கெடு விதித்து பரபரப்பு உத்தரவு! 19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கருத்துப் பரப்புதல்களில் மோடியும், அமித்ஷாவும் புல்வாமா தாக்குதலையும், அதில் உயிர் நீத்த வீரர்களையும், பேசுபொருளாக்கி வாக்கு சேகரிக்கின்றனர். இது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,140.
தேர்தல் பரப்புரையில் விதிமீறல் தொடர்பாக இதுவரை பதிவுசெய்யப்பட்ட 426 வழக்குகளில் மோடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எதுவும் தேர்தல் ஆணைய இணையத்தில் இல்லை என தகவல் வெளியாகி பரபரப்பு கிளப்பி வருகிறது.
இதனையடுத்து இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உச்சஅறங்கூற்றுமன்றம் இன்று அந்த வழக்கை விசாரித்தது.
மோடி, அமித்ஷா மீது காங்கிரஸ் கட்சி 9 புகார்கள் அளித்திருந்தது. இது தொடர்பாக வரும் திங்கள் கிழமைக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



