முதலில் பொதுவுடைமை நாட்டில் உருவான கொரோனா, மேல்தட்டு மக்கள் வழியாக விமானத்தில் பயணித்து, எனக்கு பிடிக்காதது சமூக இடைவெளி, என்ற முழுக்கத்தோடு- ஒரே உலகம் ஒரே கொரோனா என்ற தாரக மந்திரத்தோடு- அனைத்துத் தரப்பு மக்களையும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் தாக்கி வருகிற கொரோனா பரவலைத்தடுக்க ஐந்து மாநிலத்தவர்கள் கர்நாடகாவிற்குள் நுழைய கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. 15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி பாதிப்பில் இந்தியாவில் முன்னிலையில் இருக்கிற ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பேருந்து, தொடர்வண்டி, விமானம் வழியாக கர்நாடகாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்றால் இதுவரை 2418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அம்மாநில அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. கர்நாடகா அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்தது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடுத்த 10 முதல் 15 நாட்கள் பேருந்து, தொடர்வண்டி, விமானம் வழியாக கர்நாடகா மாநிலத்திற்குள் நுழைய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



