Show all

அமேதியைக் காட்டிலும் வளமான நம்பிக்கைகளோடு இராகுல் களமிறங்கும் வயநாடு! வெற்றிக்கான வாய்ப்பு விழுக்காடு என்ன

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, கேரள மாநில வயநாடு  மக்களவை தொகுதியில் வெற்றி வெளிச்சத்திற்கு மக்கள் கடைக்கண் பார்வை கிட்டுமா ;அலசுவோம். 19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அகில காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார். 

நாளை இராகுல் காந்தி வயநாட்டில் வேட்பு மனு பதிகை செய்கிறார். மாற்று வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் கே.முரளிதரம் களமிறக்கப்பட உள்ளார். இவரை எதிர்த்து சிபிஐ கட்சியின் பிபி சுனியா போட்டியிடுகிறார். 

தமிழகத்தில் சிவகங்கை அல்லது கன்னியாகுமரி, கர்நாடகாவில் பீதார், கேரளாவில் வயநாடு ஆகிய தொகுதிகளில் ஒன்றில் ராகுல் காந்தி போட்டியிட திட்டமிடப்பட்டது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்றன. 

திமுக ஆதரவில்தான் தமிழகத்தில் களமறங்க வேண்டும். மதச்சார்பற்ற ஜனதா தள ஆதரவோடுதான் கருநாடகவில் களம் இறங்க முடியும். இந்த சூழலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களான அந்தோணி, முள்ளபள்ளி ராமச்சந்திரன், ரமேஷ் சென்னிதலா, உம்மன் சாண்டி ஆகியோர் ராகுலை வயநாட்டில் நிற்க வைக்க திட்டமிட்டனர்.

இதன்மூலம் தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். கேரள மாநிலத்தில் பாஜகவை ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்க பல்வேறு கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் இடதுசாரி வேட்பாளருக்கு எதிராக ராகுல் நிற்பதால், மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தின் வயநாடு மக்களவை தொகுதி, உருவாக்கப்பட்டு மூன்றாவது முறை தேர்தலைச் சந்திக்கிறது. இது காங்கிரஸின் கோட்டையாக இருந்து வருகிறது. 

கடந்த இரண்டு முறையும் மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் எம்.ஐ.ஷானாவாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு இவரது மறைவிற்கு பின், வயநாடு தொகுதி காலியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே வயநாட்டில் வெற்றி பெறுவது இராகுலிற்கு எளிதாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமேதியைக் காட்டிலும் வளமான நம்பிக்கைகளோடு இராகுல் களமிறங்கும் வயநாடு! வெற்றிக்கான வாய்ப்பு நூறு விழுக்காடும் உத்தரவாதமே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,109.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, கேரள மாநில வயநாடு  மக்களவை தொகுதியில் வெற்றி வெளிச்சத்திற்கு மக்கள் கடைக்கண் பார்வை கிட்டுமா ;அலசுவோம். 19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அகில காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார். 

நாளை இராகுல் காந்தி வயநாட்டில் வேட்பு மனு பதிகை செய்கிறார். மாற்று வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் கே.முரளிதரம் களமிறக்கப்பட உள்ளார். இவரை எதிர்த்து சிபிஐ கட்சியின் பிபி சுனியா போட்டியிடுகிறார். 

தமிழகத்தில் சிவகங்கை அல்லது கன்னியாகுமரி, கர்நாடகாவில் பீதார், கேரளாவில் வயநாடு ஆகிய தொகுதிகளில் ஒன்றில் ராகுல் காந்தி போட்டியிட திட்டமிடப்பட்டது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்றன. 

திமுக ஆதரவில்தான் தமிழகத்தில் களமறங்க வேண்டும். மதச்சார்பற்ற ஜனதா தள ஆதரவோடுதான் கருநாடகவில் களம் இறங்க முடியும். இந்த சூழலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களான அந்தோணி, முள்ளபள்ளி ராமச்சந்திரன், ரமேஷ் சென்னிதலா, உம்மன் சாண்டி ஆகியோர் ராகுலை வயநாட்டில் நிற்க வைக்க திட்டமிட்டனர்.

இதன்மூலம் தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். கேரள மாநிலத்தில் பாஜகவை ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்க பல்வேறு கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் இடதுசாரி வேட்பாளருக்கு எதிராக ராகுல் நிற்பதால், மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தின் வயநாடு மக்களவை தொகுதி, உருவாக்கப்பட்டு மூன்றாவது முறை தேர்தலைச் சந்திக்கிறது. இது காங்கிரஸின் கோட்டையாக இருந்து வருகிறது. 

கடந்த இரண்டு முறையும் மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் எம்.ஐ.ஷானாவாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு இவரது மறைவிற்கு பின், வயநாடு தொகுதி காலியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே வயநாட்டில் வெற்றி பெறுவது இராகுலிற்கு எளிதாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமேதியைக் காட்டிலும் வளமான நம்பிக்கைகளோடு இராகுல் களமிறங்கும் வயநாடு! வெற்றிக்கான வாய்ப்பு நூறு விழுக்காடும் உத்தரவாதமே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,110.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.