Show all

சரியும் வேலைவாய்ப்புகள்! 15 ஆண்டுகளில் இவ்வாறான இழிநிலைக்கான வரலாறு இல்லை. எச்சரிக்கும் ஆய்வு

புதிய வேலைவாய்ப்பு உருவாக்க முடியாமல் இந்திய வேலைவாய்ப்பு சந்தை மிகவும் இழிநிலையில் இருந்து வருவதை-  கடந்த 15 ஆண்டுகளில் இவ்வாறான இழிநிலைக்கான வரலாறு இல்லை என்று எச்சரிக்கிறது ஓர் ஆய்வு.

24,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் கடந்த நான்காண்டுகளாகவே பொருளாதாரச் சரிவும், மந்தமான வணிகச் சூழ்நிலையும் இருந்து வரும் காரணத்தால் நாட்டில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்க முடியாமல் இந்திய வேலைவாய்ப்பு சந்தை மிகவும் இழிநிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா தொற்று மற்றும் திட்டமும் தெளிவும் இல்லாத  பொத்தாம் பொதுவான நிவாரணம் துளியும் இல்லாத ஊரடங்கு காரணங்களால் ஏற்பட்ட வணிகம் மற்றும் பொருளாதாரச் சரிவு, சீனா உடனான எல்லை சிக்கலில் நடுவண் பாஜக அரசால் எடுக்கப்பட்ட முடிவுகள் எனத் தொடர்ந்து இந்தியாவின் வணிகச் சந்தை பெரிய அளவில் தொடர் சரிவில் இருந்;து வருகிறது. 

இந்த நிலையில் இந்திய இளைஞர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சோகமான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சுமார் 800 நிறுவனங்கள் நடுவில் செய்யப்பட்ட ஆய்வில் வெறும் 3 விழுக்காடு நிறுவனங்கள் மட்டுமே அடுத்த காலாண்டுக்குப் புதிதாக ஊழியர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளன. 

இதன் மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்புச் சந்தையில் வேலைக்கு ஆட்சேர்ப்பு அளவீடு 15 ஆண்டுகள் காணாத இழிநிலையை அடைந்துள்ளதாக இந்த ஆய்வைச் செய்த ‘மேன்பவர் குரூப் எம்ளாய்மென்ட் அவுட்லுக்’ தெரிவித்துள்ளது. இந்தக் கொரோனா மற்றும் ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் வணிகத்தை இழந்து மோசமான நிலையில் இருக்கும் பல லட்சம் நிறுவனங்கள், தங்களது நிதிநிலையை மேம்படுத்தவும், இழப்புகளையும், செலவுகளையும் குறைத்துக்கொள்ளவும் ஊழியர்கள் அதிகளவில் பணிநீக்கம் செய்து வரும் இந்தச் சூழ்நிலையில் ‘மேன்பவர் குரூப் எம்ளாய்மென்ட் அவுட்லுக்’ இன்  ஆய்வு மிகுந்த எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. 

இந்த ஆய்வில் வெறும் 3விழுக்காட்டு நிறுவனங்கள் மட்டுமே இக்காலாண்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்பட்டுப் புதிய ஊழியர்களைப் பணியில் சேர்க்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.   

இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலை 15 ஆண்டுகாலத்தில் நிகழ்ந்திராத இழிநிலையாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது அதிகளவிலான பணிநீக்கம் நடுத்தர மற்றும் தொடக்க நிறுவனங்கள் நடுவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நடுவண் பாஜக அரசு பாதுகாப்பு காரணம் என்று தெரிவித்து, சீன முதலீடுகளுக்கும், சீன எண்ணிமச் சேவைகளுக்கும் விதிக்கப்பட்ட தடையால் சீனா பாதிக்கப்பட்டதோ இல்லையோ இந்தியாவில் அதிகளவிலான பணிநீக்கம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய நிறுவனங்கள் தற்போது எடுத்துள்ள  இந்த முடிவு பல கோடி இளைஞர்களை வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நிலைக்குத் தள்ளியுள்ளது. 

இந்த நிறுவனங்கள் என்செயும்.
நாளென் செயும்
வினை தானென் செயும்
எமை நாடிவந்த
கோளென் செயும்
கொடுங் கூற்றென் செயும்
கோணங்கி கொள்கை கொண்ட
நடுவண் பாஜக ஆட்சி நீளும் வரை
என்று மக்கள் புலம்புதல் 
அன்றி வேறென்ன செயும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.