Show all

வாஜ்பாய் மறைவுக்கு ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முன்னாள் தலைமை அமைச்சர் வாஜ்பாய் இன்று மாலை உடல் நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமனார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்: வாஜ்பாய் மறைவால் இந்தியா தனது சிறந்த மகனை இழந்துவிட்டது.

துணை குடிஅரசுத் தலைவர் வெங்கiயா நாயுடு: மறைந்த வாஜ்பாய் இந்திய அரசியலில் மிகச்சிறந்த ராஜதந்திரி. அவரை இந்தியா நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்திருக்கும்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்: மறைந்த வாஜ்பாய் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல மாபெரும் தலைமை அமைச்சர் ஆவார். 

அத்வானி: வாஜ்பாய் மிக சிறந்த ஆட்சியாளர். அவரது மறைவு நாட்டிற்கு ஈடு செய்ய முடியாதது. 

குடிஅரசுத் தலைவர்: ராம்நாத் கோவிந்த்: சிறந்த ஆளுமை கொண்டவர். ஆளுமையில் முதிர்ச்சியான தலைவர் வாஜ்பாய். அவரது மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு.

தலைமைஅமைச்சர் மோடி: வாஜ்பாய் அளித்த உத்வேகம், வழிகாட்டல், ஒவ்வொரு இந்தியருக்கும், பா.ஜ.கவினருக்கும் இருக்கும். அவரின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவை குறிக்கிறது. வாஜ்பாய் தேசத்துக்காக வாழ்ந்தவர். 

தமிழக கவர்னர் புரோஹித்: இந்திய அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவரது மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது.

நடிகர் ரஜினி: வாஜ்பாய் மறைவு செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,881.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.