Show all

உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சி கூடங்கள் மூடப்பட்டதால், விலங்குகளுக்கு உணவுத் தட்டுப்பாடு

உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சி கூடங்கள் மூடப்பட்டதால், உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

     உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு, லக்னோவில், சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகக் கூறி மூன்று மாட்டிறைச்சிக் கூடங்கள் மூடப்பட்டன. இங்கு, தயார் செய்யப்படும் மாட்டிறைச்சிகள்தான் லக்னோவின் பெரும்பாலான பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்நகரில் சமீபகாலமாக மாட்டிறைச்சிக்கான தட்டுப்பாடு அதிகரித்து வந்ததது. இதனால் அந்நகரின் உயிரியல் பூங்காக்களில் பாதுகாக்கப்பட்டு வரும் சிங்கம், புலி, ஓநாய் முதலிய நூற்றுக்கணக்கான மிருகங்களுக்கு உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

     இதுகுறித்து, லக்னோவில் உள்ள உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகையில்,

‘இங்குள்ள விலங்குகளுக்கு, ஒரு நாளைக்கு 235 கிலோ மாட்டிறைச்சி தேவைப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாட்டிறைச்சி தட்டுப்பாட்டால், வெறும் 80 கிலோ மாட்டிறைச்சியே விலங்குகளுக்கு கொடுக்கப்படுகிறது. சிங்கம்,புலி,சிறுத்தை, கழுதைப்புலி, ஓநாய், குள்ள நரி உள்ளிட்ட பெரும்பாலான மிருகங்கள் மாட்டிறைச்சியை தான் விரும்பி உண்ணுகின்றன. வெறும் கோழி மற்றும் ஆட்டுக்கறியால், விலங்களுக்கு போதுமான ஊட்டச்சத்துகள் கிடைப்பதில்லை’

என்று தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.