உத்தரப்பிரதேச
மாநிலத்தில் சமீபத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள பா.ஜ.க. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக
முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்து முதல்வர்
இருக்கையில் அமர்ந்த பா.ஜனதா, யோகி ஆதித்யநாத்
முதல் கட்டமாக முந்தைய ஆட்சியில் அகிலேஷ் யாதவ் நியமித்த அரசு சார்பற்ற நியமனங்களை
ரத்து செய்தார். அடுத்தக்கட்டமாக மாட்டிறைச்சி கடைகள் தொடர்பாக
நடவடிக்கையில் இறங்கி உள்ளார். அதன்படி, லக்னோ
நகரில் இயங்கிவந்த ஆடு, மாடுகளை வெட்டும் இரு கூடங்கள் சமீபத்தில் சீல் வைக்கப்பட்டன.
மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து
பல இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டு, வியாபாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால்,
சிறப்புநாள் மற்றும் விருந்தினர்களை உபசரிக்க இயலாமல் அங்கு வாழும் அசைவப் பிரியர்கள்
பெரும் திண்டாட்டத்துக்குள்ளாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக, முஸ்லிம் இன மக்கள் அதிகமாக வாழும்
முசாபர்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட கடைகளும் மூடப்பட்டுள்ளதால் இறைச்சி பிரியர்கள்
மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதானா, கட்டோலி, ஷாபூர்ம் சர்தாவால் உள்ளிட்ட
முக்கிய நகரங்களில் உள்ள 80 விழுக்காடு இறைச்சி கடைகள் பூட்டிக் கிடக்கின்றன. இந்நிலையில்,
முசாபர்நகர் மாவட்டத்தின் கைரானா இயங்கிவந்த மீம் அக்ரோ புட்ஸ் என்ற இறைச்சி பதப்படுத்தும்
தொழிற்சாலைக்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 13,14,158 மெட்ரிக்
டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.26,681 கோடியாகும். இதில்
பாதி அளவு உத்தரப்பிரதேசத்தில் இருந்துதான் ஏற்றுமதியாகிறது. இந்த ஏற்றுமதிக்கு தடை
விதிக்கவும் உ.பி. அரசு தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது. காவிபடிந்த காவியம்
எழுதப்படுகிறதா?
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



