Show all

இரு நிகழ்வுகள்: பெருங்கூட்டம் எதிர் கொண்டது கொரோனா பாதிப்பு! முன்னெடுத்தன- கணிகா கபூர் விருந்துகள், டெல்லி நிஜாமுதீன் கூட்டம்


ஒரே காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட கணிகா கபூர் விருந்துகள், டெல்லி நிஜாமுதீன் மத நிகழ்ச்சி- வடக்கு நோக்கி ஒரு கூட்டத்தினரையும், தெற்கு வரை ஒரு கூட்டத்தினரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிற சோகத்தை விளைவித்துள்ளது.

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிந்தித் திரையுலக பாடகி கனிகா கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது வட இந்தியாவை உலுக்கியது. காரணம்:- கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு இருக்கும் பாலிவுட் பாடகி கனிகா கபூர் பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள், வடஇந்திய பேரறிமுகங்களுடன் நெருக்கமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியதாகும்.

மார்ச் 9 கனிகா கபூர் இலண்டனில் இருந்து மும்பை வந்துள்ளார். அப்போதே இவருக்கு கொரோனா இருந்துள்ளது. (இவர் எப்படி கொரோனா பரிசோதனைக்கு உள்ளாகாமல் போனார். வடஇந்தியாவில் கெரோனா பரவலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை பரிசோதனை இவ்வளவுதானா? என்று அமெரிக்க அதிபர் சீனாவின் மீது கோபிக்கிற கோபம், வடஇந்திய நலங்குத்;துறை மீது நமக்கும் வருவது நியாயமே.)
மார்ச் 11 கனிகா கபூர் லக்னோ சென்றுள்ளார்.
மார்ச் 13,14,15 நாட்களில் இவர் இலக்னோவில் விருந்துகளில் கலந்து கொண்டுள்ளார். 
இதில் மார்ச் 14 அன்று கலந்து கொண்ட விருந்தில்தான் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் உடன் இருந்துள்ளனர். 
மார்ச் 16 கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இலண்டனில் இருந்து இந்தியா வந்த கனிகா கபூருக்கு மார்ச் 16ல் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன் கனிகா கபூர் கலந்து கொண்ட பல்வேறு விருந்துகளில் நடுவண் பாஜக தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

 

மார்ச் 16 அன்றுதான் இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட தொடங்கி இருக்கிறது. லக்னோவில் உள்ள கேஜிஎம்யு  மருத்துவமனையில் இவருக்கு சோதனை நடந்து தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கனிகா கபூர் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 269, 270, 188 ஆகிய நோயை பரப்புதல், மக்கள் உயிருக்கு ஊறுவிளைவித்தல், அரசு விதிகளை மீறி மக்களை தொந்தரவு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

கனிகா கபூர் கலந்து கொண்ட விருந்துகளில் மொத்தம் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர். இரண்டாது விருந்தில் 35 பேர் இருந்துள்ளனர். இதில் பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே, அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன துஷ்யந்த், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரைன், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனுபிரியா பட்டேல் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்கள் எல்லாம் தற்போது தனியாக வீட்டில் இருக்கிறார்கள். 

மேலும் இவர் கலந்து கொண்ட விருந்துகளில் நடுவண் பாஜக அமைச்சர்கள் ராஜ்வர்தன் ரத்தோர், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மதுரா ஹேமா மாலினி, நடுவண் அமைச்சர் அர்ஜுன் ராம், காங்கிரஸ் மூத்த உறுப்பினர் குமாரி செல்ஜா, குத்துசண்டை வீரர் மேரி கோம் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர். 

அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த உறுப்பினர் சஞ்சய் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் திபேந்தர் ஹ_டா, ஜிதின் பிரசதா ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் மூவரும் தற்போது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். 

இன்னொரு பக்கம் நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்யந்த் இரண்டு நாட்களுக்கு முன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். இதனால் சந்தேகத்தின் பெயரில் குடியரசுத் தலைவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இவரின் அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் மாளிகையில் இதற்காக தீவிர சோதனை நடந்து வருகிறது. 

துஷ்யந்த் சிங் கனிகாவை சந்தித்துவிட்டு, அதன்பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஸ்மிரிதி இராணி, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துள்ளார். 

அதேபோல் துஷ்யந்த் சிங் தொடர்வண்டித்துறை, போக்குவரத்துறை துறை அதிகாரிங்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். இதில் பல ஆட்சிப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் துஷ்யந்த் பாஜகவின் வருண் காந்தி, தீபக் ஹ_டா ஆகியோரை 15 அன்று சந்தித்துள்ளார். 

கனிகா கபூரை சந்தித்த பாஜக உத்தர பிரதேச அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் அதன்பின் உத்தர பிரதேசத்தில் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அதில் இவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் கேசவ் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோரை சந்தித்து இருக்கிறார். 

14ம் தேதி நடந்த விழாவில் கிரிக்கெட் வீரர் ஒருவரும், ஹிந்தித் திரையுலக பேரறிமுகங்கள் சிலரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் முழுக்க முழுக்க பேரறிமுகங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் பல பேரறிமுகங்கள் நடுவே தற்போது கொரோனா கபூர் அச்சம் எழுந்துள்ளது.

இதற்கிடையே, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 57 பேரில் 50 பேர் டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது என்று தனது ஆழந்த வருத்தத்தைப் பதிவு செய்தார்.

டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. தமிழகம் திரும்பிய 515 பேரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தியுள்ளோம். மீதமுள்ள நபர்களின் செல்பேசிகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. அனைவரும் தயவுசெய்து நலங்குத்துறையைத் தொடர்பு கொள்ளுங்கள். தானாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி மேற்கு நிஜாமுதீனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாப்லிகி ஜமாத்தில் கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மதக் கூட்டம் ஒன்று நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். சுமார் 1,700 முதல் 1,800 இந்தியர்களும், தாய்லாந்து, வங்கதேசம், இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 200 முதல் 250 வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட 9 இந்தியர்கள் உள்ளிட்ட 10 பேர் கொரோனா காரணமாக மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா சிகிச்;சை பணியில்  ஈடுபட்டிருப்பவர்களுக்கு மார்ச் 22ல் மோடி அவர்கள் கைத்தட்டி பாராட்டு தெரிவித்த நிகழ்வை, உலகளாவி பகடியாடிய பிறகே இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி அவர்கள் நடப்பு 21 நாள் ஊரடங்கை அறிவித்தார்கள். இதற்கு முன்பே இந்த இரண்டு மிகப்பெரும் கொரோனா பரப்புதல் கணிகா கபூராலும், மதக்கூட்டத்தாலும் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.