05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைய அமைப்பு, ஆப்பிள் நிறுவனத்திடம் தனது செயலிக்கு ஐபோன்களின் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பார்க்கும் வசதியை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுள்ளது. ஆனால், இது பயனாளர்களின் சேவை கொள்கைக்கு எதிரானது என்று ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது. இதனால், ஐபோன் வாடிக்கையாளர்களின் இணைப்பை துண்டிக்குமாறு தெலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு உத்தரவிடப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைய அமைப்பின் சட்ட விதிமுறைகளான 6(2)(இ) மற்றும் 23(2)(டி) படி, ஏற்கனவே சொல்லப்பட்டு இருக்கும் விதி முறைகள் தான் இது என்று கூறி, ஆப்பிள் நிறுவனம் இதை தான் கடைபிடிக்க மறுப்பதாக கூறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்பிள் தெரிவிக்கையில், ஐஓஎஸ் 10 மற்றும், ஐஓஎஸ் 11, ஐஓஎஸ் 12 ஆகிய இயங்குதளங்களில் இதற்கான அனுமதி தரப்பட்டும், பல வாடிக்கையாளர்கள் பிரச்னையை சந்தித்து வருவதால் மீண்டும் இதுகுறித்து பாதுகாப்பு விசயங்களை இந்திய தொலைத் தொடர்பு கட்டுப் பாட்டு வாரியம் அதிகப்படுத்த வேண்டும் என்கிறது. தனது செயலிக்கு ஐபோன்களின் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பார்க்கும் வசதியை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுள்ள இந்தியத் தொலைத் தொடர்பு ஆணையம் ஒன்று. ஆனால், இது பயனாளர்களின் சேவை கொள்கைக்கு எதிரானது என்று மறுக்கும் ஆப்பிள் நிறுவனம் இரண்டு இவர்கள் இருவருக்கும் வரி மூலமும், வணிகம் மூலமும் அடிப்படையாக இருக்கிற செல்பேசி வாடிக்கையாளர்கள் மூன்று. விதிகள் நான்கு. இந்த நான்குகள் குறித்து: நான்கு பேரும் நான்கு கோணத்தில் இருந்தால் எப்படி? என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,855.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



