15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ரூ.1,76,000 கோடி அரசுக்கு கூடுதலாக இலாபம் கிடைக்கும் படி சிந்திக்காமல் குறைந்த விலைக்கு ஒதுக்கியது என கணக்கு தனிக்கை குழு சிந்தித்து குற்றம்சாட்டியது. இதில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது நடுவண் புலனாய்வுத் துறை சிந்தனைக் குறைபாட்டு வழக்கு (சொத்து குவிப்பு வழக்கு மாதிரி) பதிவு செய்தது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு 21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (07.11.2017) அறிவிக்கப்படவுள்ளது. இந்த வழக்கில் நடுவண் புலனாய்வுத்துறை சார்பில் விவேக் பிரியதர்ஷி, அமலாக்கத்துறை சார்பில் ராஜேஸ்வர் சிங் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக செயல்பட்டனர். இந்நிலையில், ராஜேஸ்வர் சிங் தனக்கு 2ஜி வழக்கால் பணியில் தொல்லைகள் தரப்படுவதாகவும், தேவையற்ற வழக்குகளால் பணி உயர்வு பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி உச்சஅறங்கூற்றுமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



