14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் தலை தூக்கியிருப்பது உண்மைதானா என்று ஐயுறுமாறு அங்குள்ள கிறிஸ்துவ தேவாலயத்தின் மணியை இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, புத்த, சீக்கிய மதத்தை சேர்ந்த ஐவர் சேர்ந்து, ஒலித்து இசையெழுப்பினர். ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஹோலி பேமிலி என்ற கத்தோலிக் தேவாலயம், தமிழ்தொடர்ஆண்டு-4998 (1896)ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால், தமிழ்தொடர்ஆண்டு-5069 (1967)ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் இந்த தேவாலயத்தின் மணி சேதமடைந்தது. இந்நிலையில், 50 ஆண்டுகள் கழித்து உள்ளூரில் உள்ள கிறிஸ்துவ குடும்பத்தினர் அளித்த நன்கொடையால் தேவாலயத்திற்கு புதிய மணி பொருத்தப்பட்டது. இந்த மணி, உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்திலிருந்து தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. 105 கிலோ கொண்ட இந்த மணி, கடந்த ஞாயிறன்று தேவாலயத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு பொருத்தப்பட்டது. இந்த விழாவில், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, புத்த, சீக்கிய மதத்தை சேர்ந்த ஐவர் சேர்ந்து, மணியை ஒலித்து இசையெழுப்பினர். ‘நாம் வேறு வேறு மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், காஷ்மீர் மக்கள் என்ற பெயரால் ஒன்றிணைந்து மத நல்லிணக்கத்துடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம்’ என விழா ஒருங்கிணைப்பாளர் சிட்னி மார்க் ராத் தெரிவித்தார். -அப்படியா? உள்ளே நுழைந்தால் ஏராளமான துப்புகள் கிடைக்கும் போலிருக்கிறதே.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



