Show all

பார்வையாளர்கள் கூச்சத்தில் நெளிந்தார்கள்! விமானக்கட்டணத்தோடு ஆட்டோ கட்டணத்தை நடுவண் அமைச்சர் ஒப்பிட்டு பேசியபோது

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  சென்னையில் இருந்து சேலத்திற்கு தொடர்வண்டியில் ரூ145 கட்டணம் வசூலிக்கப் படுகிறது. சென்னை சேலம் இடைப்பட்ட தூரம் 334கி.மீட்டர்கள். நம்மை ஒரு கிமீட்டர் அழைத்துச் செல்வதற்கு நாம் தொடர்வண்டித் துறைக்கு செலுத்தும் கட்டணம் 43காசுகள் மட்டுமே. 

இந்தத் தூரத்தை விமானத்தில் கடப்பதாய் இருந்தால் நாம் செலுத்த வேண்டிய கட்டணம் விமானச் சேவைக்கு தகுந்தவாறு ரூபாய் ஏழிலிருந்து பதினைந்து வரைக்கு மேலும் கூட வசூலிக்கப் படுகிறது. அந்த அடிப்படையில் ரூ 3000க்கு குறையாது விமானக் கட்டணம்.

அதே சென்னையிலிருந்து சேலத்திற்கு ஆட்டோவில் பயணித்தால், ரூ 3340 செலுத்த வேண்டியிருக்கும். 

ஆயிரத்திற்கு 999 பேர்கள் ஆட்டோவை விரும்ப மாட்டார்கள். மிகுந்த அவசரத் தேவைக்கு மட்டுமே வேறு வழியில்லாமல் ஆட்டோவை பயன் படுத்துவார்கள். ஏனென்றால் ஆட்டோவில் கட்டணம் அவ்வளவு அதிகம். ஏனென்றால் அது உள்ளூர் அவசரத் தேவைக்கானது.

இந்தக் கணக்கீட்டில், ஆட்டோவைவிட, மலிவான விமான பயணத்தை மோடி ஆட்சி வழங்குவதாக நடுவண் அமைச்சர் ஜெயன்ந்த் சின்ஹா பெருமையாக பேசியுள்ளார்.

நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் விமானப் போக்குவரத்துத் துறை அதிகபட்ச வளர்ச்சியைக் கண்டுள்ளதாம். 

விமானப் பயணக் கட்டணத்தோடு ஆட்டோ கட்டணத்தை நடுவண் அமைச்சர் கொஞ்சம் கூட கூச்சமேயில்லாமல் ஒப்பிட்டு பேசியபோது கூட்டத்தில் இருந்த பார்வையாளர்கள் கூச்சத்தில் நெளிந்தார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,900.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.