26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகின் முன்னணி 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற போட்டியிடுவதற்காக இந்திய பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்தும் நோக்கிலான மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக திட்டத்தின் கீழ் பொதுத்துறை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மூன்று அரசு பல்கலைக்கழகங்களுக்கும், மூன்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் உலகத்தர சிறந்த கல்வி நிறுவன தகுதி நடுவண் அரசால் வழங்கப்பட்டு உள்ளது. இதில் இன்னும் தொடங்கப்படாத, முகவரி கூட இல்லாத, ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பல்கலைக்கழகத்துக்கும் இந்தத் தகுதி வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இத்தகைய கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி நிதி உதவி வழங்கப்படும். இத்தகைய நிறுவனங்கள் மொத்தத்தில் எந்தக் கட்டுப்பாடுமின்றி செயல்படும். பல்கலைக்கழகங்களை தேர்வு செய்ய கோபாலசாமி தலைமையிலான குழுவை நடுவண் அரசு நியமனம் செய்தது. 74 அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் 40 தனியார் கல்வி நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பம் செய்தனர். பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், மும்பை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், டெல்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகிய 3 அரசு நிறுவனங்களையும், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்கல்வி நிறுவனம், இன்னும் தொடங்கவே படாத முகவரியே அறிவிக்காத ஜியோ பல்கலைக்கழகம் ஆகிய 3 தனியார் பல்கலைக்கழகங் களையும் மட்டும் குழு முதற்கட்டமாக தேர்வு செய்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 5 நிறுவனங்களின் தகுதி குறித்து எந்த ஐயமும் இல்லை. ஆறாவதாக இடம் பெற்றுள்ள இன்னும் தொடங்கப்பட்டாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு எந்த தகுதியும் இல்லை. நடுவண் அரசின் அறிவிப்பு வெளியாகியதுமே சமூக வலைதளங்களில் ஜியோ கல்வி நிறுவனம் தீயாய் பரவியது. இன்னும் தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகம் சிறந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்படுள்ளது. இதுபோன்ற தகுதி என்ன அடிப்படிப்படையில் வழங்கப்பட்டது என்பதை அரசு விளக்கவேண்டியது அவசியமானது, என காங்கிரஸ் கூறியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நிதா அம்பானிக்கு சாதமாக பா.ஜனதா அரசு செயல்படுகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆயிஷா கித்வய் பேசுகையில், ஜியோ பல்கலைக்கழகத்திற்கு இன்னும் வளாகம் கூட கிடையாது, இணையதளம் அல்லது முன்னாள் மாணவர்கள் கிடையாது மற்றும் முக்கிய ஐஐடிகள் மற்றும் அசோக் பல்கலைக்கழகம் மற்றும் ஒபி ஜிண்டால் குளோப் பல்கலைக்கழகங்களை பின்னுக்கு தள்ளி முன்னே வந்துள்ளது. இனிதான் தொடங்கப்பட வேண்டும், ஆனால் உலகத்தரம் வாய்ந்த என்ற பட்டியலில் இடம்பெற்றுவிட்டது. இதனால் நோக்கத்தில் முரண்பாடு உள்ளது தெரியவில்லையா? என கேள்வியை எழுப்புகிறார். இதுபோன்று பல்கலைக்கழக பேராசியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், நடுவண் அரசின் நகர்வை விமர்சனம் செய்து கேள்விகளை எழுப்பினர். இந்நிலையில் நடுவண் அரசு இதற்கு விளக்கமளித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், தற்போது புதிதாக தொடங்கப்பட உள்ள கல்வி நிறுவனங்கள் என கருத்தில் கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாம். சம்பந்தமேயில்லாமல், மொட்டை தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுப் போட்டு விளக்கம் சொல்வதில் பாஜகவிற்கு இணை பாஜகதான். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,844.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



