17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யோகி அதித்யநாத் மதுராவுக்கு சென்றிருந்தார். அங்கு பிருந்தாவனில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்தார். அப்போது மதுராவில் வசிப்பவர்கள் முதல்வரிடம் ஒரு வித்தியாசமான புகாரை கொண்டு வந்தனர். அதாவது, 'என்ன செய்தாலும் இந்த குரங்குகள் தொல்லையில் இருந்து விடுபடவே முடியல. குரங்குகள் எல்லாம் எங்களை பாடாய் படுத்துது' என்றனர். இதைக் கேட்ட யோகி அவர்களுக்கு அபார யோசனை தந்துள்ளார். 'பூ இவ்வளவுதானா! ஹனுமனை தினமும் கும்மிட்டு, அவர் மீதான மந்திரத்தை ஓதுங்கள். குரங்குகள் என்னைக்குமே உங்களுக்கு தொல்லை தராது பாருங்கள். இப்படித்தான், நான் மடாதிபதியாக இருக்கும் கோரக்நாத் கோயிலிலும் குரங்குகள் நிறைய வரும். எப்பவுமே அந்த குரங்குகள் என் மடியிலதான் உட்கார்ந்து கொள்ளும். நான் என்ன கொடுத்தாலும் அதை சாப்பிட்டு போய் விடும்' என்றார். ஏற்கனவே இந்த மதுராவில் குரங்குகளால் 50க்கும் மேற்பட்டோர் விபத்துகளை சந்தித்துள்ளனர். அவர்கள் அனைவருமே பக்தர்கள்தான் என்று முன்பே கேள்விப் பட்டிருக்கிறோமே என்று புலம்பிக் கொண்டே, அதித்தியா நாத்தின் அபார யோசனையில் திருப்தி அடையாமல் மக்கள் கலைந்தார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,898.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



