Show all

தேஜ் மந்தீராக, தாஜ் மஹால் விரைவில் மாற்றப்படுமாம்

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தாஜ் மஹால் விரைவில் தேஜ் மந்தீர் என மாற்றப்படும் என பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் தாஜ் மகோட்சவம் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கான விழா ராம லீலாவுடன் தொடங்க யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. வரலாற்றில் முதல் முறையாக ஆக்ராவில், 10 நாட்கள் நீண்ட தாஜ் மகோட்சவம் நடத்தப்படுகிறது. இதில் முகலாய கால கலை, கலாச்சார வழக்கான நிகழ்ச்சிகளுக்குப் பதிலாக ராமாயணத்தின் அடிப்படையில் ராம் லீலாவில் நடன நாடகத்துடன் தொடங்கப்படுகிறது.

இதன் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ராம் நாய்க் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தாஜ் மஹாலில் மகோட்சவம் நடத்துவது உள்நோக்கம் கொண்டது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் தேஜ் மந்தீர் இந்நிலையில் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் வினய் கதியார் கூறும் போது தாஜ் மஹால் விரைவில் தேஜ் மந்தீர் ஆகும் என கூறி உள்ளார். தாஜ் மகோட்சவ் அல்லது தேஜோ மாகோட்ச என்று இரண்டும் ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.

தாஜ் மற்றும் தேஜ் இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை என்ற அவர் எங்கள் தேஜ மந்திர் அவுரங்கசீப்பின் சமாதியாக மாற்றப்பட்டு உள்ளது. தாஜ் மஹால் தேஜ் மந்திராக விரைவில் மாற்றப்படும் என தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,689

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.