Show all

கார்ப்பரேட்டுகளுக்கு மகிழ்ச்சி! 2 கார்ப்பரேட்டுகளை வாழ வைத்துக் கொண்டிருந்த பாஜக அரசு, எல்லா கார்ப்ரேட்டுகளுக்கும் வரிகுறைப்பு

இரண்டு கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் உதவி வந்த பாஜக அரசு, நாட்டின் பொருளாதாரத்தையும், பொருளாதார வளர்ச்சியும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் கார்ப்ரேட் வரியை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் கார்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்களின் முதலீட்டு அளவு அதிகளவில் குறைந்து வருவது மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாக முதலீடுகள் வெளியேறியும் வருகிறது. 

இரண்டு கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் உதவி வந்த பாஜக அரசு, நாட்டின் பொருளாதாரத்தையும், பொருளாதார வளர்ச்சியும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் கார்ப்ரேட் வரியை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்புதிய அறிவிப்பின் மூலம் உள்நாட்டு நிறுவனங்கள் தங்களது வருமானத்திற்குச் செலுத்த வேண்டிய வரி அளவுகள் 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாகக் குறைக்கப்பட்டு உள்ளது. 

இந்த அறிவிப்பின் மூலம் குறைந்த கார்ப்ரேட் வரி கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் ஐந்து இடங்களில் நுழைந்து 5வது இடத்தைப் பிடித்துள்ளது. இத்துடன் ‘இந்தியாவில்தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் தொடங்க இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் கார்ப்பரேட் வரியாக 15விழுக்காடு வரி செலுத்தினால் போதும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பு பல வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்களை இந்தியாவிற்கு அழைத்து வர பெரும் உதவி செய்யும். கார்ப்பரேட் வரி என்பது ஒரு நாட்டின் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் ஒரு இயந்;திரம். ஆனால் இதே இயந்திரத்திற்கு வர்த்தகத்திற்கு ஏதுவான சூழ்நிலை, வர்த்தகச் சந்தை இல்லையென்றால் இயந்திரங்கள் நிச்சயம் கெட்டுப்போகும். 

இந்திய அரசு தற்போது கார்ப்பரேட் வரியை 22 விழுக்காடு வரையில் குறைத்துள்ளது, இப்படிப்பட்ட இயந்திரம் கெட்டுப்போகமல், தொடர்ந்து இயங்க உதவும். 

இந்திய பாஜக அரசின் இந்த முயற்சி, நடப்பு பொருளாதார வீழ்ச்சியில், யானைப்பசிக்கு சோளப்பொறி என்பதுதான். அரசுக்கு கார்ப்பரேட் இயந்திரம் உதவியாக இருக்கலாம். ஆனால் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மையும், சிறு குறு நிறுவனங்களுமே ஆதாரம். என்பதை பாஜக அரசு புரிந்து கொள்ளும் போதுதாம் இந்தியாவின் உண்மையான பொருளாதார மீட்சி சாத்தியம்.

நிர்மலா சீதாராமனின் கார்ப்பரேட் வரிகுறைப்பு நடவடிக்கை, இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு கைக்கொடுக்குமா என்ற, ஒரு இயங்கலை இதழின் கருத்துக் கணிப்பில்: கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே உதவும் என்று எழுபது விழுக்காட்டு நபர்கள் வாக்களித்திருக்கிறார்கள். 
 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,282.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.