Show all

சுஷ்மா சுவராஜை பின்னுக்கு தள்ளி, தலைமை அமைச்சரானாராம் மோடி: ப.சிதம்பரம் பரபரப்பு தகவல்

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120 ப.சிதம்பரம் பிரபல ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தான் தற்போது இந்தியத் தலைமை அமைச்சராக இருந்திருக்க வேண்டும். என தெரிவித்துள்ளார். 

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை சுஷ்மா சுவராஜ் சிறப்பாக செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த தேர்தலுக்கு முன்பு மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் சுஷ்மா சுவராஜ் என்றும் அப்போதே அவர் இந்தியத் தலைமைஅமைச்சர் வேட்பாளராக உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த தேர்தலில் அதீத ஆற்றல் மற்றும் அரசியல் தந்திரம் மிக்க ஒருவர் தலைமை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும், அவரை எதிர்த்து அத்வானியும், சுஷ்மாவும் போராடி, அதில் தோல்வியையே கண்டனர் என்றும் ப.சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,842.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.