Show all

சுந்தருக்கு மிரட்டல் கடிதம்! பதினெட்டு சமஉக்கள் தகுதி நீக்க வழக்கில், செல்லாதென தீர்ப்பளித்தவர்

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு சட்டமன்றஉறுப்பிபனர்கள் பதிகை செய்த மனுக்களை விசாரித்த உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். தகுதிநீக்கம் செல்லும் என்று தலைமை அறங்கூற்றுவர் இந்திரா பானர்ஜியும், தகுதி நீக்கம் செல்லாது என்று அறங்கூற்றுவர் சுந்தரும் உத்தரவிட்டனர்.

அறங்கூற்றுவர் சுந்தர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குகளை விசாரித்து வரும்நிலையில் அவரது குடும்பத்தினர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசுக் குடியிருப்பில் தங்கியுள்ளனர். இந்நிலையில் சுந்தருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் கடும் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் தலைமை அறங்கூற்றுவர் இந்திரா பானர்ஜி எடுத்துரைத்தார். இதையடுத்து, அறங்கூற்றுவா சுந்தருக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல, அவரது இல்லத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,842.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.