Show all

ஸ்ரீநகர் தொகுதி இடைத்தேர்தல்: 2 விழுக்காடு வாக்குகளே பதிவாகி மீண்டும் அதிர்ச்சி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் தொகுதி இடைத் தேர்தலில் மறு வாக்குப் பதிவு நடைபெற்ற இடங்களில் 2 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

     ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி ஸ்ரீநகரில் இடைத்தேர்தல் நடந்தது. ஆனால் இந்த தேர்தலின் போது, போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 7 பேர் பலியாகினர்.

     ஸ்ரீநகரில் 7.14 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகின. எனவே, ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் தொகுதியில் நடக்கவிருந்த இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஸ்ரீநகர் இடைத்தேர்தலில் நடந்த வன்முறையை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.   அனந்த்நாக் தொகுதியில் பதற்றம் நிலவுவதால், அந்த தொகுதிக்கு மே மாதம் 25-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

     இந்நிலையில், மிகக்குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்ற ஸ்ரீநகர் தொகுதியில் உள்ள 38 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

     காலை முதல் மாலை வரை நடைபெற்ற வாக்குப் பதிவில் 2 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகின. மொத்தமுள்ள 35 ஆயிரத்து 169  வாக்காளர்களில் 709 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

     இந்தேயாவில் இப்படியும் ஒரு பகுதியா!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.