Show all

தமிழ்நாடு கவனமாக இருக்கவேண்டும் என்ற எச்சரிக்கையே! கர்நாடகத்திலும், கேரளாவிலும் கொரோனா பாதிப்பு எகிறியிருக்கும் நிலை

கர்நாடகத்திலும், கேரளாவிலும் கொரோனா பாதிப்பு எகிறியிருக்கும் நிலையில், தமிழகத்தில் வழக்கமான பாதிப்பே தொடருவது சற்று ஆறுதலான செய்தியே. ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திலும், உலக அளவிலும் கொரோனா பாதிப்பு முற்றாகக் குறைந்து மக்கள் மீள வேண்டும் என்ற வேண்டுகோளை விசும்பில் பதிவிட்டு செயல் தளத்திலும் செவ்வனே முனைவோம்.

19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: கர்நாடகத்தில் புதிதாக 10,145 பேர்களும், கேரளத்தில் புதிதாக 8,553 பேர்களும், கெரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கர்நாடகத்திலும், கேரளாவிலும் கொரோனா பாதிப்பு எகிறியிருக்கும் நிலையில், தமிழகத்தில் வழக்கமான பாதிப்பே தொடருவது சற்று ஆறுதலான செய்தியே. நேற்று 5,489 பேர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு என்று தமிழ்நாடு நலங்குத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று மேலும் 66 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,784 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,64,092 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 46,120 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக நலங்குத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,40,661 ஆக அதிகரித்தது. அதேவேளையில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 9,286 ஆக உயர்ந்தது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,15,782 ஆக அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,28,886 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 836 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,44,471 ஆக அதிகரித்தது. தற்போது 84,497 பேர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.